No products in the cart.
தினம் ஓர் ஊர் – காரியாபட்டி (Kariapatti Taluk) – 10/01/25
தினம் ஓர் ஊர் – காரியாபட்டி (Kariapatti Taluk)
மாவட்டம் – விருதுநகர்
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 105,428
கல்வியறிவு – 69%
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L. Pitchi (I.P.S)
District Revenue Officer – Bro. R Rajendran (Virudhunagar)
மக்களவை உறுப்பினர் – Bro. Kani K.Navas (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thangam Thennarasu (MLA)
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – திருச்சுழி
நகராட்சி ஆணையர் – Sis. M.Sugandhi (Virudhunagar)
நகராட்சி தலைவர் – Bro. R.Madhavan (Virudhunagar)
நகராட்சி துணை தலைவர் – Sis. T.Dhanalakshmi
Principal District Judge – Bro. K.Jeyakumar
ஜெபிப்போம்
காரியாபட்டி (Kariapatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் அமைந்த முதல்நிலைப் பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி மதுரையிலிருந்து 30 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கல்குறிச்சியிலிருந்து 8 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
காரியாபட்டி வட்டம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இப்பேரூராட்சி 9.20 ச.கி.மீ பரப்பளவையும் 15 வார்டுகளையும் கொண்டதாகும். இந்த வட்டத்தின் கீழ் 107 வருவாய் கிராமங்கள் உள்ளன. காரியாபட்டி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக ஜெபிப்போம்.
பாளையக்காரரின் ஆட்சியாளர்கள் தூப்பூர், கரிசல்குளம், பாளையம்பட்டி கோட்டங்களை ஜமீன் மண்டலங்களாகப் பிரித்து, காரியாபட்டி ஒவ்வொரு ஜமீனுக்கும் எல்லையாகப் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் இந்த இடத்தை தங்கள் வணிக மையமாக பயன்படுத்தினர். இந்த இடம் கழுதை சந்தைக்கு மிகவும் பிரபலமானது. எனவே, இது கழுதைப்பட்டி (கழுதை – கழுதை, பட்டி – சிறிய நகரம்) என்று அழைக்கப்பட்டது. காத்தியார் என்ற கோவில் அர்ச்சகர் இருந்ததால் இது ‘காத்தியார்பட்டி’ என்றும் அழைக்கப்பட்டது. இந்த இடம் கார சேவு என்ற சிற்றுண்டிக்கு மேலும் பிரபலமானது, ஏனெனில் இந்த இடம் காராப்பட்டி என்றும் அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் காரியாபட்டி ஆனது.
இந்த நகரம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. திருச்சுழி சட்டமன்றத் உறுப்பினர் Bro. Thangam Thennarasu அவர்களுக்காகவும், இராமநாதபுரம் மக்களவைத் உறுப்பினர் Bro. Kani K.Navas அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
காரியாபட்டி நகரத்தில் மொத்தம் 105,428 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 52,993 பேரும், பெண்கள் 52,435 பேரும் உள்ளனர். பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 70.4% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 28,032 குடும்பங்கள் இருக்கிறார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.76% பேரும், இசுலாமியர்கள் 1.63% பேரும், கிறித்தவர்கள் 2.49% மற்றும் பிற மதத்தினர் 0.13% ஆகவுள்ளனர்.
இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை ஆகும். காரியாபட்டியில் ஆண்களின் கல்வியறிவு 91.10% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 80.62% ஆகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள விவசாயிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களின் தொழிலை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
காரியாபட்டி நகரத்திற்காக ஜெபிப்போம். காரியாபட்டி நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். காரியாபட்டி நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழிலின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். காரியாபட்டி நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.