No products in the cart.

தினம் ஓர் ஊர் – கள்ளிக்குடி (Kallikudi) – 07/03/24
தினம் ஓர் ஊர் – கள்ளிக்குடி (Kallikudi)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – மதுரை
மக்கள் தொகை – 20,510
கல்வியறிவு – 72.53 %
மக்களவைத் தொகுதி – விருதுநகர்
சட்டமன்றத் தொகுதி – திருமங்கலம்
District Collector – Sis. M. S. Sangeetha (IAS)
Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)
Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)
District Revenue Officer – Bro. R. Sakthivel
மக்களவை உறுப்பினர் – Bro. B. Manickam Tagore (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. R. B. Udhayakumar (MLA)
Mayor – Sis. Indirani Pon Vasanth
Deputy Mayor – Bro.T. Nagarajan
Madurai Corporation Commissioner – Bro. C. Dinesh Kumar
Deputy Commissioner – Bro. M. Dhayanithi
Deputy Commissioner – Bro. K. Saravanan
Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)
ஜெபிப்போம்
கள்ளிக்குடி வட்டம் (Kallikudi) தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் வட்டத்தை சீரமைத்து, கள்ளிக்குடியை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, கள்ளிக்குடி வருவாய் வட்டத்தை தமிழக அரசால் 16 ஆகஸ்டு 2018 அன்று தொடங்கப்பட்டது. கள்ளிக்குடியின் உண்மையான பெயர் கள்ளிகுடி சத்திரம் ஆகும். கள்ளிக்குடி வட்டத்திற்காக ஜெபிப்போம்.
கள்ளிக்குடி நகரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. விருதுநகர் மக்களவை உறுப்பினர் Bro. B. Manickam Tagore அவர்களுக்காகவும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் Bro. R. B. Udhayakumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கள்ளிக்குடியில் இயங்குகிறது. கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவருக்காகவும், ஊராட்சி மன்றங்களுக்காகவும் ஜெபிப்போம்.
கள்ளிக்குடி வட்டத்தில் ஒரு அரசு மேனிலைப் பள்ளியும், ஒரு அரசு ஆரம்பப் பள்ளியும் உள்ளது. ஏழு கோயில்கள், இரண்டு மசூதிகள் மற்றும் இரண்டு தேவாலயங்கள் உள்ளன. ஒரு காவல் நிலையம், 24 மணிநேரம் செயல்படும் அரசு மருத்துவமனை, ஒரு ரயில் நிலையம் உள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
கள்ளிக்குடி ஊராட்சியில் 542 குடிநீர் இணைப்புகள், 14 சிறு மின்விசைக் குழாய்கள், 11 கைக்குழாய்கள், 17 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 12 உள்ளாட்சிக் கட்டடங்கள், 4 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 11 ஊரணிகள் அல்லது குளங்கள், 42 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 1 ஊராட்சிச் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது.
கள்ளிக்குடி வட்டத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இந்த வட்டத்தில் உள்ள குடும்பங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் தேவனை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.