No products in the cart.

தினம் ஓர் ஊர் – கணபதிபுரம் (Ganapathipuram) – 17/09/23
தினம் ஓர் ஊர் – கணபதிபுரம் (Ganapathipuram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 14,598
மொத்த பரப்பளவு – 5.543 ச.கி.மீ
கல்வியறிவு – 74%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – நாகர்கோவில்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் — Bro. M.R.Gandhi (MLA)
மாநகராட்சி ஆணையாளர் — Bro. Anand Mohan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
கணபதிபுரம் (Ganapathipuram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கணபதிபுரம் பேரூராட்சியின் கிழக்கில் நாகர்கோவில் 15 கிமீ; மேற்கில் குளச்சல் 18 கிமீ; வடக்கில் திங்கள் சந்தை 20 கிமீ; தெற்கில் அரபுக் கடல் உள்ளது. கணபதிபுரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
1982ல் கணபதிபுரம் இரண்டாம் நிலை பேரூராட்சியாக மாற்றப்பட்டது. இப்பேரூராட்சி 5.543 ச.கி.மீ பரப்பளவை உள்ளடக்கியது. 15 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியில் 26 தெருக்களும், 3880 வீடுகளும் உள்ளன. கணபதிபுரம் பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை வழிநடத்திட ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகளுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் M.R.Gandhi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பொறுப்பினை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியில் 14598 மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% உள்ளனர். கணபதிபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். கணபதிபுரம் சராசரி கல்வியறிவு விகிதம் 74% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 77% மற்றும் பெண்களின் கல்வியறிவு 72% ஆக உள்ளது. இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள குடும்பங்களில் கர்த்தருடைய ஆளுகை உண்டாக ஜெபிப்போம்.
கணபதிபுரம் பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற எல்லா வேலைகளிலும் கர்த்தருடைய பாதுகாப்பு கரம் அவர்களோடுகூட இருக்கும்படி ஜெபிப்போம். அவர்கள் குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.
கணபதிபுரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள சிறுபிள்ளைகளுக்காக, வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். இவர்களை கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய ஜெபிப்போம். சத்தியத்தை அறியாத மக்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு கர்த்தருடைய நாமம் மகிமைப்பட ஜெபிப்போம். சபைகள் இல்லாத பகுதிகளில் புதிய சபைகள் கட்டப்படவும், தேவ ஊழியக்காரர்களை கர்த்தர் எழுப்பி தரவும் ஜெபிப்போம்.