Daily Updates

தினம் ஓர் ஊர் – கங்கவள்ளி (Gangavalli) – 14/08/24

தினம் ஓர் ஊர் – கங்கவள்ளி (Gangavalli)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – சேலம்

பரப்பளவு – 6.5 சதுர கிலோமீட்டர்கள் (2.5 sq mi)

மக்கள் தொகை – 161,302

கல்வியறிவு – 68.82%

District Collector and District Magistrate  – Dr. R. Brindha Devi, I.A.S.

Commissioner of Corporation  – Bro.  Ranjeet Singh, I.A.S.

Additional Collector  – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,

Commissioner of Police  – Sis. B. Vijayakumari,I.P.S.,

Superintendent of Police  – Bro. A.K. Arun Kabilan, IPS.,

District Revenue Officer and

Additional District Magistrate  – Dr. P. Menaha

Salem Municipality Commissioner – Bro. Y.Surendiran

Salem Mayor – Bro. A. Ramachandran

Deputy Mayor – Sis. Saradha Devi

மக்களவைத் தொகுதி – கள்ளக்குறிச்சி

சட்டமன்றத் தொகுதி – கங்கவள்ளி

மக்களவை உறுப்பினர் – Bro. Malaiyarasan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. Nallathambi (MLA)

Principal District Judge – Sis. S.Sumathi (Salem)

ஜெபிப்போம்

கங்கவள்ளி (Gangavalli), தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் 13 வட்டங்களில் ஒன்றாகும். கங்கவல்லியின் புனிதப் பெயரான “கங்கா” (ஸ்வேதா நதி) மற்றும் கங்கவல்லியின் குறுக்கே பாயும் நதியில் பரவியிருக்கும் “வள்ளி” என்ற பூக்கும் தாவரத்தின் பெயரால் கங்கவல்லி என்று அழைக்கப்படுகிறது.

கங்கவள்ளி வட்டம் கடந்த 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இது ஜமீன்தார்களால் ஆளப்பட்டது, அவர்களில் கடைசியாக 1890 முதல் 1920 வரை கங்கவல்லியை ஆண்ட “சிதம்பர முதலியார்” என்று கூறப்படுகிறது. கெங்கவல்லி வட்டம் 40 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.

இந்த நகரம் கங்கவள்ளி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். கங்கவள்ளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. A. Nallathambi அவர்களுக்காகவும், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் Bro. Malaiyarasan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் கரம் இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளிலும் ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.

இவ்வட்டம் 161,302 மக்கள்தொகை கொண்டுள்ளது. இந்த மக்கள்தொகையில் 80,701 ஆண்களும், 80,601 பெண்களும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16406 ஆகவுள்ளது. இவ்வட்டத்தில் உள்ள மக்களில் 58% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த தொகுதியில் உள்ள மக்கள்தொகையில் இந்துக்கள் 93.65% சதவீதமும், இசுலாமியர்கள் 3.29% சதவீதமும், கிறித்தவர்கள் 2.94% சதவீதமும் மற்றும் பிறர் 0.11% சதவீதமும் வாழ்கிறார்கள். இந்த தொகுதியை பொறுத்தவரை ஆதி திராவிடர், வன்னியர், கொங்கு வேளாளர், நாயக்கர் மற்றும் முதலியார் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும் உள்ளார்கள். கங்குவள்ளி நகரத்தில் வாழும் அனைத்து சமுதாயத்து மக்களுக்காகவும் அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

இந்த நகரத்தின் முக்கியத் தொழில் விவசாயம். இந்த பகுதியில் கரும்பு, நெல், மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், பருத்தி, பாக்கு உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகின்றன. பிற வணிகங்களில் ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் பால் பொருட்கள் ஆகியவை அடங்கும். விவசாய தொழில்களில் ஈடுபட்டுள்ள விவசாய குடும்பங்களுக்காக அவர்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம். பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.

கங்கவல்லி பகுதியில் நூல் மில்கள், ஜவ்வரிசி (சேகோ) ஆலைகள் இருக்கின்றன. இந்த ஆலைகளினால் மக்களுக்கு வேலை வாய்ப்பைத் கிடைக்கின்றது. ஆலைகள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக ஜெபிப்போம். பணியின்போது அவர்களுக்கு எந்தவிதமான ஆபத்துகளும் ஏற்படாமல் கர்த்தர் அவர்களை பாதுகாக்கும்படி ஜெபிப்போம். அவர்களின் குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.

கங்கவல்லி பேரூராட்சியில் வாழும் மக்கள் கர்த்தக்கென்று எழும்பி பிரகாசிக்க ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதியில் ஆண்டவருடைய வார்தைகள் விதைக்கப்பட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.