Daily Updates

தினம் ஓர் ஊர் – ஓடைப்பட்டி (Odaipatti) – 18/10/23

தினம் ஓர் ஊர் – ஓடைப்பட்டி (Odaipatti)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தேனி

மக்கள் தொகை – 13,892

கல்வியறிவு – 69.8%

மக்களவைத் தொகுதி – தேனி

சட்டமன்றத் தொகுதி – கம்பம்

மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)

District Revenue Officer – Sis. Jeyabharathi

District Forest Officer – Bro. S.Kowtham

மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Eramakrishnan (MLA)

நகராட்சி ஆணையர் – Bro. M.Ganesan

நகராட்சி தலைவர் –  Sis. B.Renupriya

நகராட்சி துணை தலைவர் – Bro. M.Selvam

Principal District Judge  – Sis. K. Arivoli

Judicial Magistrate  – Bro. A.Ramanathan (Uthamapalayam)

Subordinate Judge  – Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)

District Munsif  – Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)

ஜெபிப்போம்

ஓடைப்பட்டி (Odaipatti) பேரூராட்சி தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தேனியிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியில் விதையில்லா திராட்சை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஓடைப்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

ஓடைப்பட்டி பேரூராட்சியானது கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Eramakrishnan அவர்களுக்காகவும், தேனி மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 88 தெருக்களும் கொண்டது. ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய பணியை உண்மை உத்தமதோடு செய்ய ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டுகளில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.

ஓடைப்பட்டியில் 13,892 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 49.8% ஆண் மற்றும் 50.2% பெண்களாக உள்ளனர். ஓடைப்பட்டியின் சராசரி கல்வியறிவு விகிதம் 69.8% ஆகும். ஓடைப்பட்டியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் வாழும் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

திராட்சை, வாழை, பீன்ஸ், தென்னை போன்றவற்றை பயிரிடுவது இந்த நகரத்தின் முக்கிய தொழில் துறையாகும். இந்த நகரத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை எல்லாம் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். விவசாயத்திற்கு தேவையான மழையை தேவன் ஏற்றகாலத்தில் கொடுக்கும்படி ஜெபிப்போம்.

ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, நகரின் முக்கிய கல்வி நிலையமாக உள்ளது. 2007, 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் தென் மண்டல அளவில் கோகோவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்கள். இந்த பேரூராட்சியில் உள்ள பள்ளிகளுக்காக ஜெபிப்போம். படிக்கும் மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஓடைப்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய வார்த்தை அறிவிக்கப்பட ஜெபிப்போம். சிறுபிள்ளைகள் மற்றும் வாலிப பிள்ளைகளை கர்த்தர் வல்லமையாய் எடுத்து பயன்படுத்தும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.