No products in the cart.
தினம் ஓர் ஊர் – இரணியல் (Eraniel) – 22/08/23

தினம் ஓர் ஊர் – இரணியல் (Eraniel)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 10375
கல்வியறிவு – 82%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – குளச்சல்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. J.G.Prince (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
Principal District Court – Bro. S.Arulmurugan
ஜெபிப்போம்
இரணியல் (Eraniel), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் வருவாய் கிராமமாகும். இந்த பேரூராட்சி தக்கலைக்கு அருகில் உள்ளது. இரணியலின் பண்டைய பெயர் எரண்யசிங்க நல்லூர் ஆகும். இரணியல் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இரணியல் பேரூராட்சி ஒரு சிறிய குடியேற்றமாகும், இது சுமார் 3 கிமீ2 பரப்பளவில் பரவியுள்ளது. இது வடக்கே தாலக்குளத்தாலும், கிழக்கில் வில்லுக்குரியாலும் எல்லையாக உள்ளது. எரானியல் திருவனந்தபுரத்திலிருந்து 72 கிமீ தொலைவிலும், கொலாச்சல் துறைமுகத்திலிருந்து 7 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 32 கிமீ தொலைவில் உள்ளது. 1745 இல், தலைநகரம் பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.
இரணியல் அரண்மனை என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின், தக்கலையில் இருந்து ஆறு கிலோ மீட்டரில் உள்ள சேரர் கால அரண்மனையாகும். இது ஏறக்குறைய 1300 ஆண்டுகள் பழமையான அரண்மனையாக கருதப்படுகிறது. இந்த அரண்மனையானது தென்னிந்தியாவில் அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய இடமாக இருந்தது, ஏனென்றால் இரணியல் நகரம் பதினாறாம் நூற்றாண்டு வரை வேணாட்டின் பருவகால தலைநகரமாக இருந்தது. இந்த அரண்மனையில் கடைசியாக உதய மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்தார். அவரது காலத்துக்கு பிறகு தலைநகரானது பத்மநாபபுரத்துக்கு மாற்றப்பட்டது.
இரணியலுக்குக் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் நாகர்கோவில்; மேற்கே 2 கி.மீ. தொலைவில் திங்கள்நகர்; வடக்கே 4 கி.மீ. தொலைவில் தக்கலை ஊரும்; தெற்கே 8 கி.மீ. தொலைவில் குளச்சல் ஊரும் உள்ளன. இரணியலுக்கு அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். குளச்சல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. J.G.Prince அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகையின் கரத்திற்குள்ளாக இவர்களை ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
மாவட்ட கலெக்டர் Bro. P.N.Sridhar அவர்களுக்காகவும், துணை மாவட்ட கலெக்டர் Bro. H.R.Koushik அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. D.N.Hari Kiran Prased அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் அலுவலர் Bro. J.Balasubramaniam அவர்களுக்காகவும், District Forest Officer Bro. M.Ilayaraja (I.F.S) அவர்களுக்காகவும், Joint Director / Project Director Bro. P.Babu அவர்களுக்காகவும், மாநகராட்சி ஆணையாளர் Bro. Anand Mohan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம்.
இரணியல் பேரூராட்சி 3.68 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 29 தெருக்களும் 2681 வீடுகளும், 10375 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 80% ஆக உள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காக ஜெபிப்போம்.
இரணியல் பேரூராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம். படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் வாலிப பிள்ளைகளுக்கு படிப்புகேற்ற நல்ல வேலையை கர்த்தர் கொடுக்கும்படி ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியில் உள்ள மருத்துவமனைகளுக்காக ஜெபிப்போம். மருத்துவமனையில் பணிபுரிகின்ற மருத்துவர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் செவிலியர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பங்களுக்காகவும், மருத்துவமனை ஊழியர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்காக ஜெபிப்போம்.
இரணியல் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். அநேக பிள்ளைகள் கர்த்தருக்கென்று எழும்பி பிரகாசித்திட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இரணியல் பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம்.
