No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஆலங்காயம் (Alangayam) – 18/10/24
தினம் ஓர் ஊர் – ஆலங்காயம் (Alangayam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருப்பத்தூர்
வட்டம் – வாணியம்பாடி
பரப்பளவு – 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
மக்கள் தொகை – 18,327
கல்வியறிவு – 77.62 %
District Collector – Bro. K. Tharpagaraj, IAS
Superintendent of Police – Sis. Shreya Gupta, IPS.
District Revenue Officer – Bro. Narayanan
Municipality Commissioner – Bro. Sathishkumar
Chairman – Sis. Uma Bai
மக்களவைத் தொகுதி – வேலூர்
சட்டமன்றத் தொகுதி – வாணியம்பாடி
மக்களவை உறுப்பினர் – Bro. Kathir Anand (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. G. Sendhil Kumar (MLA)
District and Sessions Judge – Sis. S. Meenakumari (Tirupathur)
Chief Judicial Magistrate – Bro. J. Omprakash (Tirupathur)
Subordinate Judge – Sis. P. Sudha (Tirupathur)
Principal District Munsif – Sis. R. Vijayalakshmi (Tirupathur)
ஜெபிப்போம்
ஆலங்காயம் (Alangayam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கிமீ தொலைவில் வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது.
ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது. ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான வாணியம்பாடியிலிருந்து 18 கிமீ; மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது.
ஆலங்காயத்தில் காளை கோயில், பெத்தூர், படகுப்பம், புளுகர்பள்ளி, கெஜ்ஜலூர், புங்கூர், நடுமியூர், ராஜபாளையம், எம்ஜிஆர் நகர், நரசிங்கபுரம், கல்லறைப்பட்டி, கொங்கியூர் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இப்பேரூராட்சியானது 8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆலங்காயம் பேரூராட்சியின் Commissioner Bro. Sathishkumar அவர்களுக்காகவும், Chairman Sis. Uma Bai அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
ஆலங்காயம் பேரூராட்சியானது வேலூர் மக்களவைத் தொகுதிக்கும், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. வேலூர் மக்களவை உறுப்பினர் Bro. Kathir Anand அவர்களுக்காகவும், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் Bro. G. Sendhil Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
ஆலங்காயம் டவுன் பஞ்சாயத்தில் 18,327 மக்கள்தொகை உள்ளது, இதில் 9,059 ஆண்கள் மற்றும் 9,268 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் 4,183 குடும்பங்கள் வசிக்கிறார்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 2042 ஆகும், இது ஆலங்காயம் (TP) மொத்த மக்கள் தொகையில் 11.14 % ஆகும். ஆலங்காயத்தில் ஆண்களின் கல்வியறிவு 84.82% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 70.63% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 87.49%, முஸ்லிம்கள் 11.16%, கிறிஸ்தவர்கள் 0.85% மற்றும் சீக்கியர் 0.01% உள்ளனர்.
இப்பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள்தொகையில், 7,434 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5,157 ஆண்கள் மற்றும் 2,277 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழிலுக்காகவும் ஜெபிப்போம்.
ஆலங்காயம் பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். உதயேந்திரம் நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். ஆலங்காயம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.