Daily Updates

தினம் ஓர் ஊர் – ஆட்டையாம்பட்டி (Attayampatti) – 29/08/24

தினம் ஓர் ஊர் – ஆட்டையாம்பட்டி (Attayampatti)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – சேலம்

தாலுகா – சேலம் தெற்கு (Salem South)

பரப்பளவு – 2.4 சதுர கிலோமீட்டர்கள் (0.93 sq mi)

மக்கள் தொகை – 13,852

கல்வியறிவு – 75.81%

District Collector and District Magistrate  – Dr. R. Brindha Devi, I.A.S.

Commissioner of Corporation  – Bro.  Ranjeet Singh, I.A.S.

Additional Collector  – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,

Commissioner of Police  – Sis. B. Vijayakumari,I.P.S.,

Superintendent of Police  – Bro. A.K. Arun Kabilan, IPS.,

District Revenue Officer and

Additional District Magistrate  – Dr. P. Menaha

Salem Municipality Commissioner – Bro. Y.Surendiran

Salem Mayor – Bro. A. Ramachandran

Deputy Mayor – Sis. Saradha Devi

மக்களவைத் தொகுதி – சேலம்

சட்டமன்றத் தொகுதி  – வீரபாண்டி

மக்களவை உறுப்பினர் – Bro. Tm Selvaganapathi (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. K. Tharun

Principal District Judge – Sis. S.Sumathi (Salem)

ஜெபிப்போம்

ஆட்டையாம்பட்டி (Attayampatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி திருச்செங்கோடு, இராசிபுரம் மற்றும் சேலம் ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்து வழித்தடங்களை கொண்டுள்ளது. மேலும், நகரத்தில் பல ஜவுளி ஆலைகளும் உள்ளன. ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் நெசவுத் தொழில் முக்கிய தொழில் ஆகும்.

சேலம் – திருச்செங்கோடு சாலையில் அமைந்த ஆட்டையம்பட்டி பேரூராட்சிக்கு கிழக்கில் இராசிபுரம் 18 கிமீ; மேற்கில் திருச்செங்கோடு 25 கிமீ; வடக்கில் சேலம் 18 கிமீ மற்றும் தெற்கில் நாமக்கல் 50 கிமீ தொலைவில் உள்ளது.

இப்பேரூராட்சி வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் Bro. A. K. Tharun அவர்களுக்காகவும், சேலம் மக்களவை உறுப்பினர் Bro. Tm Selvaganapathi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

ஆட்டையாம்பட்டி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 13,852 மக்கள்தொகை உள்ளது, இதில் 7,039 ஆண்கள் மற்றும் 6,813 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் 3,649 குடும்பங்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்து 99.21%, முஸ்லிம் 0.37%, கிறிஸ்தவர் 0.37% உள்ளனர்.

ஆட்டையாம்பட்டி கைமுறுக்குக்கு புகழ்வாய்ந்தது. இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கைமுறுக்கு செய்யும் தொழில் குடிசை தொழிலாக நடந்து வருகிறது. ஆட்டையாம்பட்டி மற்றும் இதைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஏறக்குறைய 200 குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முறுக்கு உற்பத்தி சார்ந்த மாவு அரைத்தல், முறுக்கு சுற்றுதல் போன்ற பணிகளில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் நாள் கூலி அடிப்படையில் வேலையில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்காக ஜெபிப்போம்.

ஆட்டையாம்பட்டியின் சராசரி கல்வியறிவு 75.81% உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 84.44% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 66.91% ஆகவும் உள்ளது. இந்த ஊரில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்கு மேலும் 3 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பேரூராட்சியில் உள்ள பள்ளிகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மொத்த மக்கள் தொகையில், 6,461 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4,452 ஆண்கள் மற்றும் 2,009 பெண்கள். ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் நெசவுத் தொழில் முக்கிய தொழில் ஆகும். நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காகவும், தொழிலின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். ஆட்டையாம்பட்டி பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம். சத்தியத்தை அறியாத மக்களுக்கு ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.