No products in the cart.
தினம் ஓர் ஊர் – அவனியாபுரம் (Avaniapuram) – 28/03/24
தினம் ஓர் ஊர் – அவனியாபுரம் (Avaniapuram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – மதுரை
மக்கள் தொகை – 89,635
கல்வியறிவு – 75%
மக்களவைத் தொகுதி – விருதுநகர்
சட்டமன்றத் தொகுதி – திருப்பரங்குன்றம்
District Collector – Sis. M. S. Sangeetha (IAS)
Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)
Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)
District Revenue Officer – Bro. R. Sakthivel
மக்களவை உறுப்பினர் – Bro. B. Manickam Tagore (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. V.V.Rajan Chellappa (MLA)
Mayor – Sis. Indirani Pon Vasanth
Deputy Mayor – Bro.T. Nagarajan
Madurai Corporation Commissioner – Bro. C. Dinesh Kumar
Deputy Commissioner – Bro. M. Dhayanithi
Deputy Commissioner – Bro. K. Saravanan
Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)
ஜெபிப்போம்
அவனியாபுரம் (Avaniapuram) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இதன் பழமையான பெயரில், அவனிபசேகரமங்கலம் என்றும் பிள்ளையார்பாளையம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இதன் பெயர் மருகி அவனியாபுரம் என தற்போது அழைக்கப்படுகிறது. பொங்கல் தினத்தன்று நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு இப்பகுதி பிரபலமானது. அவனியாபுரம் நகராட்சிக்காக ஜெபிப்போம்.
அவனியாபுரம் என்கிற இப்பகுதி, கடந்த 2011 உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இந்த நகரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் B. Manickam Tagore அவர்களுக்காகவும், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. V.V.Rajan Chellappa அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
அவனியாபுரம் நகரம் 21 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இது மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்தில், 60-வது வார்டில் உள்ளது. Madurai Corporation Commissioner Bro. C. Dinesh Kumar அவர்களுக்காகவும், Deputy Commissioner Bro. M. Dhayanithi அவர்களுக்காகவும், Deputy Commissioner Bro. K. Saravanan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். அவனியாபுரம் நகராட்சியின் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
அவனியாபுரம் நகராட்சியின் மக்கள்தொகை 89,635 ஆகும். இதில் 45,283 ஆண்கள் மற்றும் 44,352 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 23,051 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவனியாபுரத்தில் 91.69% இந்துக்கள், 6.35% முஸ்லிம்கள், 1.91% கிறிஸ்தவர்கள் மற்றும் 0.05% பிற மதங்களைப் பின்பற்றுகின்றனர். இந்த நகராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும், குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.
அவனியாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 80%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். அவனியாபுரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்காக ஜெபிப்போம். ஆசிரியர்களுக்காகவும், படிக்கும் பிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 35,831 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 27,156 ஆண்கள் மற்றும் 8,675 பெண்கள். இவர்களில் 752 முக்கிய விவசாயத் தொழிலாளர்கள், 2,871 வீட்டுத் தொழிலில், 30,420 இதரத் தொழிலாளர்கள் மற்றும் 1,699 குறு தொழிலாளர்கள் உள்ளனர். அவனியாபுரத்தில் விசைத்தறி ஜவுளி ஆலைகள், பருத்தி துண்டுகள், வேட்டிகள், ஆயத்த சட்டைகள் தயாரிப்பு வணிகம், சோப்பு சோப்பு உற்பத்தி, மரச்சாமான்கள் வேலைகள், மரத்தூள் மில் மற்றும் பால் பண்ணைகள் ஆகியவை முக்கிய வணிகமாகும். அவனியாபுரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம்.