Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கஃபர் எல் ஷேக் (Kafr El-Sheikh)

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கஃபர் எல் ஷேக் (Kafr El-Sheikh)

நாடு (Country) – எகிப்து (Egypt)

கண்டம் (Continent) – ஆப்பிரிக்கா (Africa)

மக்கள் தொகை – 3,759,316

அலுவலக மொழி – Egyptian Arabic

அரசாங்கம் – சர்வாதிகார ஆட்சியின் கீழ் அரசு

*ஒற்றையாட்சி அரை ஜனாதிபதி குடியரசு

President – Abdel Fattah el-Sisi

Prime Minister – Mostafa Madbouly

Governor – Alaa Ibrahim Abdelmoati

மொத்த பரப்பளவு  – 3,437 km2 (1,327 sq mi)

தேசிய பறவை – Steppe Eagle

தேசிய மலர் – Egyptian Lotus

தேசிய மரம் – Doum palm

தேசிய விளையாட்டு – Football

நாணயம் – Egyptian Pound

ஜெபிப்போம்

கஃபர் எல் ஷேக் (Kafr El-Sheikh) என்பது எகிப்தின் ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்குப் பகுதியில், நைல் டெல்டாவில் நைல் நதியின் மேற்குக் கிளையில் அமைந்துள்ளது. இந்த ஆளுநரகத்தை எகிப்து ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் நிர்வகிப்பார். இதன் தலைநகரம் கஃப்ர் எல் ஷேக் நகரம் ஆகும்.

கஃபர் எல் ஷேக்கில் உள்ள சுற்றுலாத் தளங்கள்: எல்-போரோலோஸ் ஏரி, தேசூக் பூங்கா, சயீத் தல்ஹா அபி சையத் எல்-டெல்மெசனியின் மசூதி, சயீத் இப்ராஹிம் எல்-தேசூக்கியின் மசூதி, கன்னி மேரி தேவாலயம், சாகா மலைகள் & ஃபரீன் மலைகளின் வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் புகழ்பெற்ற புரட்சிகரத் தலைவர் சாத் ஜாக்லூலின் வசிப்பிடம்.

கஃபர் எல் ஷேக்கில் கோதுமை, அரிசி, பருத்தி மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை பெருமளவில் பயிரிடப்படுகிறது. மேலும், மீன்பிடித்தல் மற்றொரு முக்கியமான தொழிலாகவும் வருமான ஆதாரமாகவும் உள்ளது. பால் பொருட்கள், சோப்புகள் மற்றும் பீட்ரூட் சர்க்கரை உற்பத்தி உட்பட பல தொழில்கள் இங்கு செழித்துள்ளன. பல அரிசி ஆலைகள், பருத்தி விதை ஆலைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு தொழிற்சாலைகளும் இந்த ஆளுநரகத்தில் வெற்றிகரமாக இயங்குகின்றன.

கஃபர் எல் ஷேக் ஆளுநரகத்தின் President, Prime Minister, Governor ஆகியோருக்காக ஜெபிப்போம். இந்த ஆளுநரக மக்களின் இரட்சிப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார  வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இந்த ஆளுநரகத்திலுள்ள அனைத்து திருச்சபைகளிலும் பரிசுத்த ஆவியானவரின் அக்கினி ஊற்றப்பட்டு எழுப்புதல் ஏற்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.