bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

ஜனவரி 06 – வேலியடைத்தார்!

“அவர் அதை வேலியடைத்து.” (ஏசா. 5:2).

திராட்சத்தோட்டத்தை நாட்டின கர்த்தர் அதற்கு ஒரு வேலிதேவை என்று கண்டார். வேலி இல்லாத திராட்சத்தோட்டம்திறந்து விடப்பட்டநிலையில் இருக்கும். ஆடுகளும், மாடுகளும்மேய்ந்து நாசமாக்கிவிடும். காட்டுப்பன்றி அதனுடையவேர்களை உழுதுபோட்டுவிடும். ஆகவே கர்த்தர் வேலியடைக்கதீர்மானித்தார்.

வேலி என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. முதலாவது, அது மற்ற தோட்டங்களைவிட்டு வேறுபிரிக்கிறது. இரண்டாவது, அது பாதுகாப்பைத் தருகிறது. கர்த்தர்ஆபிரகாமை அழைத்தபோது முதலாவது தன்னுடையதேசத்தையும், ஜனத்தையும், தகப்பன் வீட்டையும்விட்டுவேறுபிரியும்படிச் சொன்னார். அதன் பின்பு ஆபிரகாமுக்குஅவரது வாழ்நாளெல்லாம் தானே வேலியாக நின்றுபாதுகாத்தார். ஆகவே நாம் கர்த்தருக்கென்றுவேறுபிரிக்கப்பட்ட மக்களாக இருந்து, தேவனுடைய வேலியைஏற்றுக்கொள்ளும்போது அதுவே நமக்கு பாதுகாப்பாகஅமைகிறது.

ஏசாயா 5-ம் அதிகாரம் 2-ம் வசனத்தில் வேலி என்றும், 5-ம்வசனத்தில் “அதன் அடைப்பை’ என்றும் இரண்டுவிதமானவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அடைப்பு என்றுசொன்னால் ஆங்கிலத்திலே ‘கல்சுவர்’ என்று அர்த்தமாகிறது. அது பாதுகாப்பின் சுவர். அதேநேரம், அதை அடுத்துமுள்வேலியும் கூடவே இருக்கிறது. ஆவிக்குரிய அர்த்தத்தில்முள்வேலியும், அடைப்பும் இயேசு கிறிஸ்துவின்இரத்தத்தினால் நமக்குக் கிடைக்கிற பாதுகாப்பைக்குறிக்கின்றன.

பழைய ஏற்பாட்டு இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காஆட்டுக்குட்டியின் மறைவுக்குள் இருந்தபோது சங்காரதூதனால் அவர்களுடைய குடும்பத்தைச் சேதப்படுத்தமுடியவில்லை. புதிய ஏற்பாட்டிலே இயேசு கிறிஸ்து தம்முடையசொந்த இரத்தத்தையும், வியர்வையையும், கண்ணீரையும்சிந்தி நமக்கு ஜெப வேலியானார்.

நமக்கு வேலியாக இயேசுகிறிஸ்துவின் ஜெபம் உண்டு(யோவா. 17:11). பரிசுத்த ஆவியானவரின் ஜெபமுண்டு (ரோம. 8:26). கர்த்தருடைய ஊழியர்களின் ஜெபமுண்டு, எண்ணற்றவிசுவாசிகளின் ஜெபமுண்டு, சபையாரின் ஜெபமுண்டு. கர்த்தருடைய பிள்ளைகளின் வேலி எத்தனை வல்லமையானது! “பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச்சுற்றிலும் இருக்கிறார்” (சங். 125:2).

உங்களுடைய விசுவாசக் கண்கள் திறக்கப்படும். கர்த்தர்உங்களைச் சூழ வேலியாகவும், மதிலாகவும் நிற்கிறதைக்காண்பீர்களாக! யாக்கோபின் புத்திரருக்கு அன்றுவேலியாகவும், மதிலாகவும் அவர் நின்றதை ஆதி. 35:5-லேவாசித்துப்பாருங்கள். அதுபோலவே இஸ்ரவேல் ஜனங்கள்எகிப்தைவிட்டு புறப்பட்டபோது கர்த்தர் அவர்களுக்குவேலியாக அக்கினி மதிலைக் கட்டளையிட்டார்.

சிங்கக்கெபியிலே தானியேலை சிங்கங்கள்சேதப்படுத்தாதபடி தானே வேலியாக நின்றார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அக்கினிச்சூளையிலேபோடப்பட்டபோது அவர்கள் அக்கினியால் சேதமாகாதபடிவேலியானார். இன்றைக்கும் அக்கினி மதிலாக நான் உன்னைச்சூழ்ந்துகொள்ளுவேன் என்று பரிசுத்த ஆவியானவரை நமக்குத்தந்திருக்கிறார்.  தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களைக்காக்கும்படி தம்முடைய தேவதூதர்களுக்குக்கட்டளையிட்டிருக்கிறார்.

நினைவிற்கு:- “அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடையசத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்” (சங். 91:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.