No products in the cart.
ஆகஸ்ட் 25 – தேவனுடைய பிள்ளைகள் யார்?
“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவா. 1:12).
நீங்கள் எந்த குடும்பத்தில் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள்? பர்திமேயு, திமேயுவின் மகனாகப் பிறந்தார். திமேயுவின் மூலமாக ஆசீர்வாதங்களும் வந்திருக்கக்கூடும். அதே நேரத்தில் சாபங்களும் வந்திருக்கக்கூடும். உங்களுடைய முற்பிதாக்கள் எப்படிப்பட்டவர்கள்?
உங்களுடைய பெற்றோர் நீதிமான்களாய் இந்த பூமியிலே வாழ்ந்திருந்தால், அதினிமித்தம் கர்த்தர் ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கம் செய்வார். துன்மார்க்கராய் வாழ்ந்திருந்தால், மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு கர்த்தர் பெற்றோரின் அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலே விசாரிப்பார்.
நீங்கள் எந்தக் குடும்பத்திலே பிறந்திருந்தாலும் கர்த்தருடைய குடும்பத்திற்கு வந்துவிடுங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்கு தகப்பனாய் இருப்பாரென்றால் ஆயிரம் தலைமுறைக்கு நீங்கள் இரக்கம் பெறுவீர்கள். இன்றைக்கு நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
உலகத்திலுள்ள எல்லா ஜனங்களையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, பிசாசின் பிள்ளைகள். அடுத்தது, தேவனுடைய பிள்ளைகள். வேதம் சொல்லுகிறது, “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், …. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்” (1 யோவா. 3:8,9).
ஒருமுறை, ஒரு பாட்டி குறும்பு பண்ணிக்கொண்டிருந்த தன் பேரப் பிள்ளையை அழைத்து, “நீ பிசாசின் பிள்ளையா? அல்லது தேவனுடைய பிள்ளையா?” என்று அதட்டிக்கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் தலை நிமிர்ந்து மார்பிலே தட்டி, “நான் இயேசப்பாவின் செல்லப்பிள்ளை” என்றான். அப்பொழுது அந்த பாட்டி, “நீ இயேசப்பாவின் பிள்ளையானால், இன்றைக்கு ஜெபித்தாயா? வேதம் வாசித்தாயா?” என்று கேட்டார். அவன் ஓடியே போய்விட்டான்.
உண்மையிலே தேவனுடைய பிள்ளைகள் யார்? கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களும், பாவ மன்னிப்பையும் இரட்சிப்பின் சந்தோஷத்தையும் பெற்றுக்கொண்டவர்களும், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் விசுவாசமாய் அவரை ஏற்றுக்கொண்டவர்களுமே தேவனுடைய பிள்ளைகள். வேதம் சொல்லுகிறது, “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவா. 1:12).
இயேசுவை ஏற்றுக்கொண்டதோடு நீங்கள் நின்றுவிடக்கூடாது. அவருடைய வேத வசனத்தின்படி வாழ உங்களை அர்ப்பணிக்கவேண்டும். இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, நம்மை அறியாமலேயே, உலகத்தாரைவிட்டு வேறு பிரியும்படி, நம் உள்ளுணர்வுகள் நம்மை ஏவி எழுப்புகின்றன.
வேதம் சொல்லுகிறது, “தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே” (2 கொரி. 6:16).

நினைவிற்கு:- “நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (2 கொரி. 6:18).