No products in the cart.
ஆகஸ்ட் 05 – நினைவுகள் எப்படி?
“அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” (நீதி.23:7).
ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவனுடைய சிந்தனைகளையும், எண்ணங்களையும், நினைவுகளையும் அடிப்படையாகக்கொண்டே அமைகிறது. ஒரு மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் எப்படி அமைகின்றனவோ அதன்படியே அவன் இருக்கிறான் (நீதிமொழிகள் 23:7) என்றும், “நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்” (நீதி. 12:5) என்றும், “துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்” (நீதி. 15:26) என்றும் வேதம் சொல்லுகிறது.
உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருந்தாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டே இருக்கிறார்கள். ஒரே பெற்றோருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தாலும் அவர்கள் நான்கு பேருமே நான்கு விதமான நிலைமையில் ஜீவிக்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வுக்கு அவர்களுடைய சிந்தனைகளும், நினைவுகளும் வேறுபட்டு இருப்பதுதான் காரணம்.
இன்றைக்குப் பலர் தங்களுடைய எண்ணங்களைக் குறித்து அக்கறைக் கொள்ளாமல் வாழுகிறார்கள். மனிதன் தன் சிந்தனைகளைக் கற்பனையிலே சிறகடித்துப் பறக்கவிடுகிறான். மனதிலே பெரிய பெரிய மண்கோட்டைகளைக் கட்டுகிறான். சில எண்ணங்கள் தவறாய் இருக்கும்போது அதற்கேற்றபடி வாழ்க்கையும் தவறானதாய் அமைந்துவிடுகிறது.
ஒருவர் தன்னுடைய அலுவலகத்திலே உயர்ந்த பதவியை எப்படியாகிலும் பெற விரும்பினார். ஆனால் அதற்கான தகுதிகள் அவரிடமில்லை. ஆகவே அவர் குறுக்கு வழியை நாட ஆரம்பித்தார். “ஒருவேளை நாம் மேலே ஏற முயலும்போது ஒரு சிலரை மிதிக்க வேண்டியது இருக்கலாம். நாம் ஏன் அந்த உயர்ந்த பதவியில் அமரக்கூடாது? வேறு யாரோ ஒருவர் அந்தப் பதவியில் இருப்பதைவிட நானே அந்த இடத்தில் இருப்பது எவ்வளவு நல்லது” என்று எண்ணத் துவங்கினார்.
தன் எண்ணங்களை குறுக்கு வழியில் நிறைவேற்றுவதற்காகப் பல மந்திரவாதிகளை அணுகினார். உயர் மட்டத்தில் இருக்கிறவர்களைக் கீழே இறக்கும்படி செய்வினை செய்ய முற்பட்டார். அந்தோ பரிதாபம்! அவர் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடியவே, அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது மனநிலை சீர்கேடடைந்தது. இதன் காரணமாக இறுதியில் அவருக்கு இருந்த வேலையும் பறிபோயிற்று.
வேதம் சொல்லுகிறது: “தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு” (நீதி. 14:22). ஒரு கிறிஸ்தவனின் உள்ளத்தில் தவறான நோக்கங்களும், தவறான சிந்தனைகளும், தீய நினைவுகளும் கண்டிப்பாக இருக்கவேகூடாது. இந்த தீய காரியங்கள் உங்கள் ஆத்மீக பெலத்தைக் களவாடும்படி முயற்சி செய்து வெற்றியும் பெறுகின்றன.
ஆகவே, தீய சிந்தனைகள் உங்கள் உள்ளத்தை ஆக்கிரமித்து, உங்கள்மேல் ஆளுகை செய்துவிடாதபடி தடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. உங்களுடைய உள்ளத்தில் தீய எண்ணங்கள் ஏற்படுவதைத் தடுத்து, நல்ல எண்ணங்கள் வருவதற்கு வேத வசனங்களை உள்ளத்தில் விதைத்து வையுங்கள். வாக்குத்தத்த வசனங்களைத் தியானியுங்கள். கல்வாரி அன்பை எண்ணி தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களது நினைவுகள் தூய்மையானவையாய் இருக்கட்டும்.

நினைவிற்கு:- “ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்” (நீதி. 21:5).