Daily Updates

தினம் ஓர் ஊர் – விளாங்குடி (Vilangudi) – 21/03/24

தினம் ஓர் ஊர் – விளாங்குடி (Vilangudi)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – மதுரை

மக்கள் தொகை – 16,598

கல்வியறிவு – 87.4%

மக்களவைத் தொகுதி – மதுரை

சட்டமன்றத் தொகுதி – மதுரை (மேற்கு)

District Collector – Sis. M. S. Sangeetha (IAS)

Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)

Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)

District Revenue Officer – Bro. R. Sakthivel

மக்களவை உறுப்பினர் – Bro. S. Venkatesan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Raju K (MLA)

மாமன்ற உறுப்பினர்  –  Sis. சி.நாகஜோதிசித்தன்

Mayor – Sis. Indirani Pon Vasanth

Deputy Mayor – Bro.T. Nagarajan

Madurai Corporation Commissioner – Bro. C. Dinesh Kumar

Deputy Commissioner – Bro. M. Dhayanithi

Deputy Commissioner – Bro. K. Saravanan

Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)

ஜெபிப்போம்

விளாங்குடி (Vilangudi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் மண்டலம் எண் 2-இல், வார்டு எண் 20-இல் அமைந்துள்ளது. முன்னர் இது ஒரு பேரூராட்சியாக இருந்தது. மதுரை மாநகராட்சி விரிவாக்கத்தின் போது விளாங்குடி பேரூராட்சி, மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. விளாங்குடி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

மதுரை District Collector Sis. M. S. Sangeetha அவர்களுக்காகவும், Additional Collector (D) / Project Director Bro. S. Saravanan அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. Dongare Pravin Umesh அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. R. Sakthivel அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

விளாங்குடி பேரூராட்சி மதுரை மக்களவைத் தொகுதிக்கும், மதுரை (மேற்கு) சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. மதுரை மக்களவை உறுப்பினர் Bro. S. Venkatesan அவர்களுக்காகவும், மதுரை (மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் Bro. Raju K அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணியினை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.

விளாங்குடி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த பகுதியின் மாமன்ற உறுப்பினராக சி.நாகஜோதிசித்தன், என்ற ஒரு பெண் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,073 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். விளாங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். விளாங்குடி டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 8,081 குடும்பங்கள் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.

விளாங்குடியில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 11,848 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 8,754 ஆண்கள் மற்றும் 3,094 பெண்கள் ஆவார்கள். இந்த பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

விளாங்குடி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் தேவனை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.