Daily Updates

தினம் ஓர் ஊர் – முக்கூடல் (Mukkudal) – 15/02/24

 

தினம் ஓர் ஊர் – முக்கூடல் (Mukkudal)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருநெல்வேலி

மக்கள் தொகை – 14,983

கல்வியறிவு – 88.15%

மக்களவைத் தொகுதி – திருநெல்வேலி

சட்டமன்றத் தொகுதி – ஆலங்குளம்

District Collector – Bro. K. P. Karthikeyan (I.A.S)

Superintendent of Police – Bro. N.Silambarasan (I.P.S)

District Revenue Officer – Sis. M.Suganya

Joint Director / Project Director – Bro. S.Suresh

மக்களவை உறுப்பினர் – Bro. S.Gnanathiraviam (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. P. H. Manoj Pandian (MLA)

Deputy Mayor – Bro. K.R.Raju

Commissioner – Bro.V. Sivakrishnamurthy

Chief Judicial Magistrate – Bro. S. Manojkumar (Tirunelveli)

Principal Sub Judge  – Bro. M. Amirtha Velu (Tirunelveli)

Principal District Judge – Sis. C.P.M. Chandra

ஜெபிப்போம்

முக்கூடல் (Mukkudal) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு மற்றும் கடநா நதிகள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப்பெயராயிற்று. முக்கூடல் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்களுக்காக ஜெபிப்போம்.

முக்கூடல் பேரூராட்சிக்கு கிழக்கே திருநெல்வேலி (20 கிமீ); மேற்கே அம்பாசமுத்திரம் (15 கிமீ); வடக்கே ஆலங்குளம் (19 கிமீ); தெற்கே சேரன்மாதேவி     (11 கிமீ) ; வட மேற்கு கடையம் (15 கிமீ) தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிகு அருகாமையில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 15.36 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், கவுன்சிலர்களுக்காகவும், ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.

முக்கூடல் பேரூராட்சி ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர்   Bro. P.H.Manoj Pandian அவர்களுக்காகவும், திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் தேவசித்தம் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.

முக்கூடல் டவுன் பஞ்சாயத்தில் 14,983 மக்கள்தொகை உள்ளது. இதில் 7,274 ஆண்கள் மற்றும் 7,709 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 4,137 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். முக்கூடல் நகரத்தின் கல்வியறிவு விகிதம் மாநில சராசரியான 80.09% ஐ விட 88.15% அதிகமாக உள்ளது. . முக்கூடலில், ஆண்களின் கல்வியறிவு 93.80% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 82.89% ஆகவும் உள்ளது. இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவரின் கரத்திற்குள் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

மொத்த மக்கள் தொகையில், 7,765 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4,127 ஆண்கள் மற்றும் 3,638 பெண்கள் உள்ளனர். அவர்களில் வணிகம், வேலை, சேவை, மற்றும் விவசாயி மற்றும் தொழிலாளக இருக்கிறார்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற எல்லா வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

முக்கூடல் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். முக்கூடல் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், குடும்பங்களில் இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு ஆண்டவரை ஏற்றுகொள்ளவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.