No products in the cart.
தினம் ஓர் ஊர் – பனைமரத்துப்பட்டி – 16/09/24
தினம் ஓர் ஊர்-பனைமரத்துப்பட்டி அல்லது பனமரத்துப்பட்டி (Panaimarathupatti)
மாநிலம்-தமிழ்நாடு
மாவட்டம்-சேலம்
பரப்பளவு-12 ச.கி.மீ. பரப்பு
மக்கள் தொகை-9,368
கல்வியறிவு-75.17%
District Collector and District Magistrate -Dr. R. Brindha Devi, I.A.S.
Commissioner of Corporation -Bro. Ranjeet Singh, I.A.S.
Additional Collector -Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,
Commissioner of Police -Sis. B. Vijayakumari,I.P.S.,
Superintendent of Police -Bro. A.K. Arun Kabilan, IPS.,
District Revenue Officer and
Additional District Magistrate -Dr. P. Menaha
Salem Municipal Commissioner-Bro. Y.Surendiran
Salem Mayor-Bro. A. Ramachandran
Deputy Mayor-Sis. Saradha Devi
மக்களவைத் தொகுதி-சேலம்
சட்டமன்றத் தொகுதி -வீரபாண்டி
மக்களவை உறுப்பினர்-Bro. Tm Selvaganapathi (MP)
சட்டமன்ற உறுப்பினர்-Bro. A. K. Tharun
Principal District Judge-Sis. S.Sumathi (Salem)
ஜெபிப்போம்
பனைமரத்துப்பட்டி அல்லது பனமரத்துப்பட்டி (Panaimarathupatti) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
பனைமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு வடக்கில் சேலம் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் தெற்கில் ஆத்தூர் 60 கி.மீ. தொலைவிலும்; தெற்கில் நாமக்கல் 50 கி.மீ.; மேற்கில் மேட்டூர் 50 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
பனமரத்துப்பட்டி ஏரி (Panamarathupatti lake) தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள ஓர் ஏரியாகும். 936 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியின் கொள்ளளவு ஒரு டிஎம்சி ஆகும். சேலம் நகரத்தின் தெற்கில் அமைந்துள்ள துணைநகரங்களின் நீராதாரம் இந்த ஏரியாகும். சேலம் நகரத்தின் வேடந்தாங்கல் என்று இதை அழைக்கிறார்கள்.
இப்பேரூராட்சி வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் Bro. A. K. Tharun அவர்களுக்காகவும், சேலம் மக்களவை உறுப்பினர் Bro. Tm Selvaganapathi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
பனைமரத்துப்பட்டி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியானது 12 ச.கி.மீ. பரப்பும், 33 தெருக்களையும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சியின் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம்.
பனைமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 9,368 மக்கள் தொகை உள்ளது, இதில் 4,663 ஆண்கள் மற்றும் 4,705 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் 2,468 குடும்பங்கள் வசிக்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்து 98.36%, முஸ்லிம் 0.59%, கிறிஸ்தவர் 1.02% உள்ளார்கள். பனைமரத்துப்பட்டியில் ஆண்களின் கல்வியறிவு 82.78% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 67.68% ஆகவும் உள்ளது.
இப்பேரூராட்சியில் உள்ள மொத்த 4422 உழைக்கும் மக்களில், 95.75 % பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,886 ஆண்கள், 1,536 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கிற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
பனைமரத்துப்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். சத்தியத்தை மக்கள் அறியாத மக்களுக்கு சத்தியம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். பனைமரத்துப்பட்டி பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.