Daily Updates

தினம் ஓர் ஊர் – பணகுடி (Panagudi) – 09/02/24

தினம் ஓர் ஊர்-பணகுடி (Panagudi)

மாநிலம்-தமிழ்நாடு

மாவட்டம்-திருநெல்வேலி

மக்கள் தொகை-29,895

கல்வியறிவு-77%

மக்களவைத் தொகுதி-திருநெல்வேலி

சட்டமன்றத் தொகுதி-இராதாபுரம்

District Collector-Bro. K. P. Karthikeyan (I.A.S)

Superintendent of Police-Bro. N.Silambarasan (I.P.S)

District Revenue Officer-Sis. M.Suganya

Joint Director / Project Director-Bro. S.Suresh

மக்களவை உறுப்பினர்-Bro. S.Gnanathiraviam (MP)

சட்டமன்ற உறுப்பினர்-Bro. M. Appavu (MLA)

Deputy Mayor-Bro. K.R.Raju

Commissioner-Bro.V. Sivakrishnamurthy

Chief Judicial Magistrate-Bro. S. Manojkumar (Tirunelveli)

Principal Sub Judge -Bro. M. Amirtha Velu (Tirunelveli)

Principal District Judge-Sis. C.P.M. Chandra

District Munsif cum Judicial Magistrate- Bro. M.Anand (Radhapuram)

ஜெபிப்போம்

பணகுடி (Panagudi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியில் ஓடு மற்றும் செங்கல் தயாரித்தல் முக்கிய தொழிலாக உள்ளது. இவ்வூரில் சிறப்பு மிக்க பணகுடி சாஸ்தா கோயில், இராமலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவில் மற்றும் புனித சூசையப்பர் திருத்தலமும் உள்ளன.

இப்பேரூராட்சி மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், கன்னியாகுமரிக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலிக்கு தெற்கே 52 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது இராதாபுரத்திலிருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது. பணகுடி பேரூராட்சியானது 49 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 166 தெருக்களும் கொண்டுள்ளது.

பணகுடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் ‘பாணர்கள்’ என்ற தாழ்த்தப்பட்ட இனமக்கள் அதிகமாக வாழ்ந்த காரணத்தால் இவ்வூர் “பாணர்குடி” என்று அழைக்கப்பட்டது. பின்னர் “பணகுடி” என்றாயிற்று என்பார்கள். இன்னொரு சாரார் பனைமரக்காடுகள் அதிகமாக இருந்த காரணத்தால் பனைத்தொழில் இப்பகுதியில் சிறந்து விளங்கியது என்றும் அதனால் ‘பனைக்குடி’ என்று அழைக்கப்பட்டு பின்னர் “பணகுடி” என்று மருவியதாகவும் கருதுகிறார்கள். ஆங்கிலேயர்கள் பணகுடிக்கு வருவதற்கு முன்பு பணகுடி ‘உத்தமபாண்டியபுரம்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் பணகுடி என்றாயிற்று. பணகுடியை முரத்த நாடு என்றும் அழைப்பார்கள்.

பணகுடி பேரூராட்சி திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காகவும், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. M. Appavu அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுடைய பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.

பணகுடியில் 29,895 மக்கள் உள்ளனர். மக்கள் தொகையில் ஆண்கள் 49% மற்றும் பெண்கள் 51% உள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து ஆகிய மூன்று மதங்களை பின்பற்றுபவர்கள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர். இந்த பேரூராட்சியில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

பணகுடியில் முக்கியத் தொழில் வேளாண்மை. பணகுடியில் ஆற்று நீர்ப்பாசனம், குளத்து நீர்ப்பாசனம் முறையிலும் விவசாயம் செய்கின்றனர். பணகுடியில் செம்மண்ணும் களிமண்ணும் அதிகம் கிடைப்பதல் செங்கல் சூளைகளுக்கும், ஓடு தொழிற்சாலைகளுக்கும் முக்கிய மூலப்பொருளாக மண் பயன்படுத்தப்படுகிறது. இங்கு ஏராளமான ஓடுகள் மற்றும் செங்கற்கள் தயாரிக்கப்பட்டு, வெளியிடங்களுக்கும், வெளியூர்களுக்கும், வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

இங்கு நெற்பயிர் அதிகம் விளைச்சல் ஆகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் நெல் பயிரிடப்படுகிறது. இதற்கு நீர்ப்பாசனம், அனுமான் நதியில் இருந்தும், குளத்தில் இருந்தும் கிடைக்கிறது. மேலும் இப்பகுதியில் சோளம், கேழ்வரகு, மிளகு, தென்னை, காய்கறி, வாழை, பனை போன்றவையும் பயிரிடப்படுகின்றன.

பணகுடியை பொறுத்தவரையில் தொழில்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. பணகுடியில் உள்ள அதிகமான பெண்கள் பீடி சுற்றுகிறார்கள். மேலும் சிறுதொழில்களாக, தங்க நகை செய்தல், மரச்சாமான்கள் செய்தல், தட்டச்சு, மண்பானை செய்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. பணகுடியில் சர்வோதய சங்கம் சிறப்பு பெற்றதாகக் காணப்படுகிறது. இங்கு மரச்சாமன்கள், சோப்பு, செருப்பு, தேன், ஊதுபத்திகள், தலையணை போன்ற இதர பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

பணகுடி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். பணகுடி பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற எல்லா வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு ஆண்டவரை ஏற்றுகொள்ளவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.