No products in the cart.
தினம் ஓர் ஊர் – தேரூர் (Theroor) – 11/09/23

தினம் ஓர் ஊர் – தேரூர் (Theroor)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 7,615
கல்வியறிவு – 86%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – கன்னியாகுமரி
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
Revenue Officer (Nagercoil) – Bro. K.Sethuramalingam
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thalavai Sundaram (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
தேரூர் (Theroor) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். தேரூக்கு, கிழக்கில் மருங்கூர் ஊராட்சி, 3 கி.மீ.; மேற்கில் நாகர்கோவில் 8.10 கி.மீ.; வடக்கில் வெள்ளமடம் 2 கி.மீ.; தெற்கில் சுசீந்திரம் 2 கி.மீ. தொலைவில் உள்ளன. தேரூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
தேரூர் பேரூராட்சி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. பேரூராட்சி 1972 ஆம் ஆண்டு முதல் முதல் நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. 1997 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாக தரம் அமைக்கப்பட்டது. 1996 ஆம் வருட நகராட்சிகள் சட்டத்தின்கீழ் 14.07.2006ல் இரண்டாம் நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. தேரூர் பேரூராட்சியின் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Thalavai Sundaram அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பொறுப்பை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம்.
தேரூர் பேரூராட்சி 9.64 ச.கி.மீ. பரப்பளவை கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகளும், 35 தெருக்களும், 2,148 வீடுகளும் உள்ளன. இங்குள்ள வார்டு உறுப்பினர்களுக்காகவும், பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் கடமையை பொறுப்புடனும் செய்ய ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியில் 7,615 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% பேர் உள்ளனர். தேரூரில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தில் இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்படவும், குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
தேரூரில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற எல்லா வேளைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். தொழில்களில் வளர்ச்சி உண்டாக ஜெபிப்போம். தொழிலுக்குண்டான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
தேரூர் பேரூராட்சியின் சராசரி கல்வியறிவு 86% உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 89% மற்றும் பெண்களின் கல்வியறிவு 83% ஆகும். இந்த பேரூராட்சியில் படிக்கின்ற பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் வாலிப பிள்ளைகளுக்கு கர்த்தர் நல்ல வேலையை கொடுத்து அவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
