No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஜோலார்பேட்டை (Jolarpet) – 19/10/24
தினம் ஓர் ஊர் – ஜோலார்பேட்டை (Jolarpet)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருப்பத்தூர்
மக்கள் தொகை – 29,662
கல்வியறிவு – 83.3%
District Collector – Bro. K. Tharpagaraj, IAS
Superintendent of Police – Sis. Shreya Gupta, IPS.
District Revenue Officer – Bro. Narayanan
Municipality Commissioner – Bro. J. Fransis Xavier
Chairman – Sis. M. Kaviya
மக்களவைத் தொகுதி – திருவண்ணாமலை
சட்டமன்றத் தொகுதி – ஜோலார்பேட்டை
மக்களவை உறுப்பினர் – Bro. Cn Annadurai (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K. Devaraji (MLA)
District and Sessions Judge – Sis. S. Meenakumari (Tirupathur)
Chief Judicial Magistrate – Bro. J. Omprakash (Tirupathur)
Subordinate Judge – Sis. P. Sudha (Tirupathur)
Principal District Munsif – Sis. R. Vijayalakshmi (Tirupathur)
ஜெபிப்போம்
ஜோலார்பேட்டை (Jolarpet) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இதனருகில் ஏலகிரி மலை உள்ளது. இது திருப்பத்தூருக்கு 9 கி.மீ. தொலைவிலும், வேலூருக்கு தென்கிழக்கே 85 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
ஜோலார்பேட்டை என்பது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இரயில்வே நகரம் ஆகும். இது தெற்கு இரயில்வேயில் ஒரு பயணிகள் ரயில் மையமாகும், இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய இரயில்வே சந்திப்புகளில் ஒன்றாகும். ஜோலார்பேட்டை தொடருந்து நிலையம், சென்னை, சேலம், பெங்களூர், மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூர் போன்ற நகரங்களை இணைக்கும் தென்னக இரயில்வேயின் முக்கிய சந்திப்பாகும்.
இந்நகரம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் Bro. K. Devaraji அவர்களுக்காகவும், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் Bro. Cn Annadurai அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
ஜோலார்பேட்டை நகராட்சி 1971 இல் 23.5.1971 முதல் முதல் தர டவுன் பஞ்சாயத்து தேர்வு கிரேடு டவுன் பஞ்சாயத்து 1982 முதல் 24.02 1982 முதல் உருவாக்கப்பட்டது, பின்னர் அது 01.07 2004 முதல் மூன்றாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஜோலார்பேட்டை நகராட்சியானது 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Municipality Commissioner Bro. J. Fransis Xavier அவர்களுக்காகவும், Chairman Sis. M. Kaviya அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இந்த நகராட்சியின் மக்கள்தொகை 29,662 ஆகும். இந்த நகரத்தில் 7,140 குடும்பங்கள் வசிக்கிறார்கள். இதில் 1,000 ஆண்களுக்கு 1,032 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது,மக்கள்தொகையில் இந்துக்கள் 91.87%, இசுலாமியர்கள் 4.44%, கிறித்தவர்கள் 3.55%, தமிழ்ச் சமணர்கள் 0.0%., மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.
ஜோலார்பேட்டை நகராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். ஜோலார்பேட்டை நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். ஜோலார்பேட்டை நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.