bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Daily Updates

தினம் ஓர் ஊர் – சுரண்டை(Surandai) – 02/08/23

தினம் ஓர் ஊர் – சுரண்டை

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தென்காசி

மக்கள் தொகை – 35272

கல்வியறிவு – 65%

மக்களவைத் தொகுதி – தென்காசி

சட்டமன்றத் தொகுதி – தென்காசி

மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)

District Revenue Inspector – Bro. M.Nagaranjan

Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu

மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Palani Nadar (MLA)

நகராட்சி ஆணையர் – Bro. S.Lenin

நகராட்சி தலைவர் –  Bro. P.Vallimurugan

நகராட்சி துணை தலைவர் – Sis. N.Sankaradevi

Reveneue Inspector – Bro. M.Angusamy (Surandai)

Principal District Munsif – Bro. K. Baskar

Additional District Judge – Sis. G.Anuradha

ஜெபிப்போம்

சுரண்டை (Surandai), தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். முன்பு “சுரண்டை”  “ராஜ சூரிய நல்லூர்” என்று அழைக்கப்பட்டது, பின்னர் அது “சுரந்தை” ஆனது. கடந்த 50 ஆண்டுகளாக இந்நகரின் பெயர் சுரண்டையாக அழைக்கப்பட்டு வருகிறது. சுரண்டை நகராட்சிக்காக ஜெபிப்போம்.

மதுரை நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் சுரண்டை பாளையம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இது சமீனாக மாற்றபட்டது. சுரண்டை நகரானது கீழ் சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை ஆகிய சிற்றூர்களின் ஒருங்கிணைப்பில் உருவானது ஆகும். கிராமமாக இருந்த இந்த ஊர் 1980களில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த நகராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தென்காசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் Bro. S.Palani Nadar அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்காக ஜெபிப்போம்.

தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு 2021 ஆகஸ்ட் 24 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நகராட்சியானது 27 வார்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுடைய பணியினை உண்மை உத்தமதோடு செய்ய கர்த்தர் கிருபை கொடுக்கும்படி ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டுகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

சுரண்டை நகராட்சி ஆணையர் Bro. S.Lenin அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. P.Vallimurugan அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. N.Sankaradevi அவர்களுக்காகவும், சுரண்டை நகராட்சியின் வருவாய் ஆணையர் Bro. M.Angusamy அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

சுரண்டை திருநெல்வேலி – தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கிமீ தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சுரண்டை நகராட்சிக்கு அருகில் உள்ள ஊர்களுக்காக ஜெபிப்போம். அந்த ஊர்களில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம்.

சுரண்டை நகராட்சியில் மொத்தம் 35272 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 17488 பேர் ஆண்களும், 17784 பேர் பெண்களும் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 9511 குடும்பங்கள் இருக்கிறார்கள். இந்த நகராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத மக்கள் இரட்சிக்கப்பட பாரத்தோடு ஜெபிப்போம்.

சுரண்டையில் ஒரு காலத்தில் முதன்மையாக விவசாயம் மற்றும் பனை மர வளர்ப்பைக் கொண்ட கிராமமாக இருந்தது. தற்போது அருகிலுள்ள பஞ்சாயத்துகளுக்கு முழுமையான வணிகம் மற்றும் வணிகத்திற்கான பரபரப்பான மையமாக வளர்ந்துள்ளது. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். அவர்கள் குடும்பத்தினர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.