No products in the cart.

தினம் ஓர் ஊர் – கோபாலசமுத்திரம் (Gopalasamudram) – 04/02/24
தினம் ஓர் ஊர் – கோபாலசமுத்திரம் (Gopalasamudram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருநெல்வேலி
மக்கள் தொகை – 10694
கல்வியறிவு – 86.59 %
மக்களவைத் தொகுதி – திருநெல்வேலி
சட்டமன்றத் தொகுதி – அம்பாசமுத்திரம்
District Collector – Bro. K. P. Karthikeyan (I.A.S)
Superintendent of Police – Bro. N.Silambarasan (I.P.S)
District Revenue Officer – Sis. M.Suganya
Joint Director / Project Director – Bro. S.Suresh
மக்களவை உறுப்பினர் – Bro. S.Gnanathiraviam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Esakki Subaya (MLA)
Deputy Mayor – Bro. K.R.Raju
Commissioner – Bro.V. Sivakrishnamurthy
Chief Judicial Magistrate – Bro. S. Manojkumar (Tirunelveli)
Principal Sub Judge – Bro. M. Amirtha Velu (Tirunelveli)
Principal District Judge – Sis. C.P.M. Chandra
ஜெபிப்போம்
கோபாலசமுத்திரம் (Gopalasamudram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டம், சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதுதிருநெல்வேலி மக்களவை உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காகவும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Esakki Subaya அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
கோபாலசமுத்திரம் பேரூராட்சியானது மாவட்டத் தலமையிடமான திருநெல்வேலியிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கோபாலசமுத்திரத்திற்கு கிழக்கே 10 கிமீ தொலைவில் மேலப்பாளையம், மேற்கே 9 கிமீ தொலைவில் சேரன்மாதேவி; வடக்கே 4 கிமீ தொலைவில் பேட்டை; தெற்கே 22 கிமீ தொலைவில் களக்காடு உள்ளது.
இந்த பேரூராட்சியானது 10.5 சகிமீ பரப்பும், 105 தெருக்களும், 15 வார்டுகளும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பும், வழிநடத்தலும் இவர்களோடுகூட இருக்க ஜெபிப்போம்.
கோபாலசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் 10,694 மக்கள்தொகை உள்ளது, இதில் 5,338 ஆண்கள் மற்றும் 5,356 பெண்கள் உள்ளனர். இந்த பேரூராட்சியில் மொத்தம் 2,890 குடும்பங்கள் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
மொத்த மக்கள் தொகையில் 5,470 பேர் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,253 ஆண்கள் மற்றும் 2,217 பெண்கள் உள்ளனர். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற பணிகளுக்காகவும் ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.