Daily Updates

தினம் ஓர் ஊர் – கூடலூர் (Gudalur) – 22/10/23

தினம் ஓர் ஊர் – கூடலூர் (Gudalur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தேனி

மக்கள் தொகை – 41,915

கல்வியறிவு – 66.83%

மக்களவைத் தொகுதி – தேனி

சட்டமன்றத் தொகுதி – கம்பம்

மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)

District Revenue Officer – Sis. Jeyabharathi

District Forest Officer – Bro. S.Kowtham

மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Eramakrishnan (MLA)

நகராட்சி ஆணையர் – Bro. Sekar

நகராட்சி தலைவர் –  Sis. L.Padmavathi

நகராட்சி துணை தலைவர் – Sis. S.Kanjana

Revenue Inspector – Bro. P.Ayyappasamy

Principal District Judge  – Sis. K. Arivoli

Judicial Magistrate  – Bro. A.Ramanathan (Uthamapalayam)

Subordinate Judge  – Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)

District Munsif  – Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)

ஜெபிப்போம்

கூடலூர் (Gudalur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் இரண்டாம்நிலை நகராட்சி ஆகும். தமிழ்நாடும், கேரளமும் கூடும் ஊரக எல்லையில் அமைந்து இருப்பதால் இவ்வூர் கூடலூர் என அழைக்கப்படுகிறது. கூடலூர் நகராட்சி மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்து இருப்பதால் இயற்கையான சூழ்நிலையைப் பெற்றுள்ளது. கூடலூர் நகராட்சிக்காக ஜெபிப்போம்.

1901ஆம் ஆண்டில் கிராமப் பஞ்சாயத்தாகத் தொடங்கப்பட்ட இந்த ஊர், 1952 ஆம் ஆண்டில் பேரூராட்சி நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 10-07-2004 முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் உள்ள நகராட்சி இது. இந்நகராட்சியில் மேலக்கூடலூர், கீழக்கூடலூர், லோயர்கேம்ப் என்கிற மூன்று ஊர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நகராட்சி கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Eramakrishnan அவர்களுக்காகவும், தேனி மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

கூடலூர் நகரம் 21 வார்டுகளை கொண்ட சிறப்பாக செயல்பட்டுகொண்டு வருகிறது. நகராட்சி ஆணையர் Bro. Sekar அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. L.Padmavathi அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. S.Kanjana அவர்களுக்காகவும், Revenue Inspector Bro. P.Ayyappasamy அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பும், வழிநடத்தலும் இவர்களோடுகூட இருக்க ஜெபிப்போம். நகராட்சியின் பணிகளுக்காக ஜெபிப்போம்.

இந்நகரத்தின் மக்கள்தொகை 41,915 ஆகும். அதில் 20,895 ஆண்களும், 21,020 பெண்களும் உள்ளனர். . மக்கள்தொகையில் இந்துக்கள் 92.31%, இசுலாமியர்கள் 5.25%, கிறித்தவர்கள் 2.34% மற்றும் பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.02% ஆகவுள்ளனர். கூடலூர் நகரத்தில் மொத்தம் 12,001 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய பாதுகாப்பு கரத்திற்குள் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். குடும்பங்களில் தெய்வீக சமாதானம் உண்டாக ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

இந்த நகரத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை விவசாயத்தைச் சுற்றியே உள்ளது, இந்த இடம் நெல் வயல்களால் சூழப்பட்ட நகரமாகும்.  முக்கிய பயிர்கள் நெல், பருப்பு வகைகள், தென்னை, திராட்சை, காய்கறிகள், பூக்கள் மற்றும் நிலக்கடலை. இஞ்சி, பருத்தி போன்ற பயிர்களும் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. முக்கிய நீர் ஆதாரம் பெரியாறு அணையில் இருந்து கிடைக்கிறது. முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களுக்கு மணிமண்டபம் அமைந்துள்ளது. பன்னீர் திராட்சை சாகுபடி அதிகம் இப்பகுதயில் செய்யப்படுகிறது. விவசாய தொழிலையும், விவசாயிகளையும் கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக ஜெபிப்போம்.

இந்த நகரத்தில் 13,578 முக்கிய விவசாயத் தொழிலாளர்கள், 799 விவசாயிகள், 637 வீட்டுத் தொழில்கள், 4,206 இதரத் தொழிலாளர்கள், 1,640 குறு தொழிலாளர்கள், 22 குறு விவசாயிகள், 1,055 குறு விவசாயத் தொழிலாளர்கள், 1,055 குறு விவசாயத் தொழிலாளர்கள் என மொத்தம் 20,860 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக அவர்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.