Daily Updates

தினம் ஓர் ஊர் – உசிலம்பட்டி (Usilampatti) – 23/02/24

தினம் ஓர் ஊர் – உசிலம்பட்டி (Usilampatti)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – மதுரை

மக்கள் தொகை – 1,95,236

கல்வியறிவு – 78.39%

மக்களவைத் தொகுதி – தேனி

சட்டமன்றத் தொகுதி – உசிலம்பட்டி

District Collector – Sis. M. S. Sangeetha (IAS)

Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)

Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)

District Revenue Officer – Bro. R. Sakthivel

மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. P. Ayyappan (MLA)

Municipal Engineer cum

Municipal Commissioner  – Bro. K.Muthu

நகராட்சி தலைவர் – Sis. K.Sagunthala

நகராட்சி துணை தலைவர் – Sis. S.Thenmozhi

Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)

D.M Cum J.M No.I, (Usilampatt)i – Bro. Sengamala Selvan

ஜெபிப்போம்

உசிலம்பட்டி (Usilampatti) என்பது தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் இரண்டாம் தர நகராட்சி ஆகும். உசிலம்பட்டி நகரம் தேனி நகரத்திலிருந்து கிழக்கே 37 கிமீ தொலைவிலும், மதுரை நகருக்கு மேற்கே 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. உசிலம்பட்டி நகரத்திற்காக ஜெபிப்போம்.

உசிலம்பட்டி வட்டம் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. உசிலம்பட்டி வட்டத்தின் கீழ் கருமாத்தூர், சிந்துபட்டி, உசிலம்பட்டி, உத்தப்பநாயக்கனூர், வாலாந்தூர் என 5 குறுவட்டங்களும், 54 வருவாய் கிராமங்களும் உள்ளன. இந்த தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.

உசிலம்பட்டி நகரம் தேனி மக்களவைத் தொகுதிக்கும், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. தேனி மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் Bro. P. Ayyappan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

உசிலம்பட்டி தாலுகா 24 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வட்டத்தின் Municipal Engineer cum Municipal Commissioner Bro. K.Muthu அவர்களுக்காகவும்,  நகராட்சி தலைவர் Sis. K.Sagunthala அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. S.Thenmozhi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளையும் ஆளுகை செய்ய ஜெபிப்போம். நகராட்சியின் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.

உசிலம்பட்டி தாலுக்காவின் மக்கள் தொகை 1,95,236 ஆகும். இதில் 99,804 ஆண்கள் மற்றும் 95,432 பெண்கள் உள்ளனர். இவர்களில் 94.53% இந்துக்கள், 2.33% முஸ்லிம்கள், 2.91% கிறிஸ்தவர்கள், 0.02% சீக்கியர்கள், 0.19% மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

இந்த நகரத்தின் சராசரி கல்வியறிவு 78.39% ஆகும். கல்வியறிவு பெற்ற மக்களில் கிட்டத்தட்ட 52% ஆண்கள் கல்வியறிவு பெற்றவர்கள் மற்றும் மீதமுள்ள 48% பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள். இந்த வட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

நகரத்தின் முக்கிய தொழில் விவசாயம் சார்ந்துள்ளது. மேலும் மொத்த மக்கள்தொகையில் 25% பேர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஊறுகாய் மற்றும் பிஸ்கட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்காகவும், இவர்கள் கையிட்டு செய்கின்ற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.