No products in the cart.
தினம் ஓர் ஊர் – ஆலாம்பாளையம் (Alampalayam) – 23/07/24
தினம் ஓர் ஊர் – ஆலாம்பாளையம் (Alampalayam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாமக்கல்
பரப்பளவு – 10.32 சதுர கிலோமீட்டர்கள் (3.98 sq mi)
மக்கள் தொகை – 20,286
கல்வியறிவு – 75.25%
District Collector – Sis. S. Uma, IAS
Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S
District Revenue Officer – Bro. R.Suman
Project Director – Bro. S.Vadivel
District Forest Officer – Bro. S.Kalanithi, I.F.S.,
Municipality Commissioner – Bro. R. Sekar (Tiruchengode)
Chairman – Sis. S.Nalini (Tiruchengode)
Vice-Chairman – Bro. T.Karthikeyan (Tiruchengode)
மக்களவைத் தொகுதி – ஈரோடு
சட்டமன்றத் தொகுதி – குமாரபாளையம்
மக்களவை உறுப்பினர் – Bro. Ganeshamurthi.A (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. P. Thangamani (MLA)
Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)
Principal District Munsif – Sis. A. Saranya (Tiruchengode)
ஜெபிப்போம்
ஆலாம்பாளையம் (Alampalayam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியின் வட்டாரத்தில் சேஷசாயி காகித ஆலை நிறுவனமும் உள்ளது. இந்த நகரத்தில் பெரும்பான்மையான தொழிலாக கருதப்படுவது விவசாயமும், நெசவும் ஆகும்.
ஆலம்பாளையம் பேரூராட்சி, திருச்செங்கோடு – ஈரோடு செல்லும் சாலையில், நாமக்கல்லிருந்து 48 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் திருச்செங்கோடு 15 கிமீ; மேற்கில் ஈரோடு 7 கிமீ; வடக்கில் பரமத்தி-வேலூர் 45 கிமீ; தெற்கில் குமாரபாளையம் 15 கிமீ தொலைவில் உள்ளது.
ஆலாம்பாளையம் நகர் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Municipality Commissioner – Bro. R. Sekar அவர்களுக்காகவும், Chairman – Sis. S.Nalini அவர்களுக்காகவும், Vice-Chairman – Bro. T.Karthikeyan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பொறுப்புகளுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் Bro. P. Thangamani அவர்களுக்காகவும், ஈரோடு மக்களவை உறுப்பினர் Bro. Ganeshamurthi.A அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஆலம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் 20,286 மக்கள் தொகை உள்ளது, இதில் 10,264 ஆண்கள் மற்றும் 10,022 பெண்கள். ஆலம்பாளையத்தில் ஆண்களின் கல்வியறிவு 82.22% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 68.07% ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சியில் மொத்தம் 5,785 குடும்பங்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 95.71%, முஸ்லீம்கள் 1.85%, கிறிஸ்தவர்கள் 2.43% உள்ளனர்.
இப்பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 9,705 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 6,515 ஆண்கள் மற்றும் 3,190 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கிற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
ஆலம்பாளையம் பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் பெரும்பான்மையான தொழிலாக கருதப்படுவது விவசாயமும், நெசவும் ஆகும். விவசாயிகளுக்காகவும், நெசவாளர்களுக்காகவும், அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.