No products in the cart.
தினம் ஓர் ஊர் – ஆர். புதுப்பட்டி (R.Pudupatti) – 31/07/24
தினம் ஓர் ஊர் – ஆர். புதுப்பட்டி (R.Pudupatti)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாமக்கல்
தாலுகா – இராசிபுரம் (Rasipuram)
பரப்பளவு – 17.20 சதுர கிலோமீட்டர்கள் (6.64 sq mi)
மக்கள் தொகை – 7,478
கல்வியறிவு – 69.55%
District Collector – Sis. S. Uma, IAS
Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S
District Revenue Officer – Bro. R.Suman
Project Director – Bro. S.Vadivel
District Forest Officer – Bro. S.Kalanithi, I.F.S.,
மக்களவைத் தொகுதி – நாமக்கல்
சட்டமன்றத் தொகுதி – இராசிபுரம்
மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. M. Mathiventhan (MLA)
Municipality Commissioner – Bro. A. Muthusamy (Rasipuram)
Chairman – Sis. R. Kavitha Sankar (Rasipuram)
Vice-Chairman – Sis. Gomathi Anandhan (Rasipuram)
Executive Officer – Bro. Gopiraja.N (R.Pudupatti)
Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)
District Munsif – Sis. S. Santhi (Rasipuram)
Subordinate Judge – Bro. J.K. Dhilip (Rasipuram)
ஜெபிப்போம்
ஆர். புதுப்பட்டி (R.Pudupatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினந்தோறும் 70 எல்.பி.சி.டி. குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஆர். புதுப்பட்டி பேரூராட்சியானது 17.20 சகிமீ பரப்பளவை கொண்டுள்ளது, இப்பேரூராட்சிக்கு தெற்கில் 41 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. இதன் கிழக்கே ஆத்தூர் 43 கிமீ; வடக்கில் சேலம் 38 கிமீ தொலைவில் உள்ளது.
ஆர்.புதுப்பட்டி நகர் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காகவும், அவர்கள் தங்கள் பணியை உண்மையாக செய்ய ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி இராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. M. Mathiventhan அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 7,478 மக்கள் தொகை உள்ளது, இதில் 3,781 ஆண்கள் மற்றும் 3,697 பெண்கள். இதில் 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள்தொகை 664 ஆகும், இப்பேரூராட்சியில் 2,105 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். உள்ளன. மக்கள்தொகையில் இந்து 99.59%, முஸ்லிம் 0.24% மற்றும் கிறிஸ்தவர் 0.09% ஆக உள்ளனர். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
ஆர்.புதுப்பட்டி நகரின் கல்வியறிவு விகிதம் 69.55% ஆக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 77.90% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 61.23% ஆகவும் உள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி, இரா.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்௧ப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்௧ப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்௧ப் பள்ளி ஆகியவை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பேரூராட்சியில் உள்ள பள்ளிகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஆர்.புதுப்பட்டி பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். பேரூராட்சியின் தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூருட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தொழிலாளர்களுக்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்படவும், சுவிசேஷம் அறிவிக்கப்படவும் ஜெபிப்போம்.