Daily Updates

தினம் ஓர் ஊர் – ஸ்ரீவில்லிபுத்தூர் – 03/07/23

தினம் ஓர் ஊர் – ஸ்ரீவில்லிபுத்தூர்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – விருதுநகர்
மக்கள் தொகை – 293,209
கல்வியறிவு – 86.25%
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – ஸ்ரீவில்லிபுத்தூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
Deputy Superintendent of Police – Bro. A.Chandrasekaran (I.P.S) (Virudhunagar)
District Revenue Officer – Bro. J.Ravikumar (Virudhunagar)
மக்களவை உறுப்பினர் – Bro. M.Kumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. E.M.Manraj (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. N.Rajamanickam
நகராட்சி தலைவர் – Bro. T.Ravikannan
நகராட்சி துணை தலைவர் – Bro. S.Selvamani
Revenue Inspectors – Bro.R.Muthukrishnan, Sis.S.Lakshmi (Srivilliputhur)
Additional District and Sessions Judge – Bro. T.V.Hemanandakumar (Virudhunagar)
Principal District Judge – Sis. V.Thilaham (Srivilliputhur)
Chief Judicial Magistrate Judge – Bro. E.Muthusamy (Srivilliputhur)

ஜெபிப்போம்

திருவில்லிபுத்தூர் (Thiruvilliputhur), அல்லது ஶ்ரீவில்லிபுத்தூர், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். திருவில்லிபுத்தூர் தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். இவ்வூர் நெசவுத் தொழிலுக்கும், பால்கோவா என்ற இனிப்புத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்காக அதன் தொழில் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.

இந்த ஊருக்கு இப்பெயர் வரக்காரணம் இதனை உருவாக்கிய வில்லி என்பவார். வில்லிபுத்தூர் என்று பெயரிடப்பட்ட இவ்வூர், திருமகளாகிய ஆண்டாளின் அவதாரத் தலமாக இருப்பதால் தமிழில் உயர்ச்சொல்லான “திரு” என்கிற அடைமொழியோடு திருவில்லிபுத்தூர் என்று வழங்கப்படுகிறது. தற்போது ஸ்ரீ என்கிற வடமொழி சேர்த்து “ஸ்ரீ” வில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நகராட்சியின் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. E.M.Manraj அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. M.Kumar அவர்களுக்காகவும், மாவட்ட ஆட்சியர் Bro. V.P.Jeyaseelan அவர்களுக்காகவும், விருதுநகர் காவல்துறை கண்காணிப்பாளர் Bro. A.Chandrasekaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர் Bro. N.Rajamanickam அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. T.Ravikannan அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Bro. S.Selvamani அவர்களுக்காகவும், வருவாய்துறை ஆணையர்கள் Bro.R.Muthukrishnan, Sis.S.Lakshmi (Srivilliputhur) அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் என 3 உள்வட்டங்களும், 26 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் 3 உள்வட்டங்களைக் கொண்டு புதிய வத்திராயிருப்பு வட்டம் 18 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது. இந்த நகராட்சியில் உள்ள கிராம மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இது 1984 இல் முதல் தர நகராட்சியாக பதவி உயர்வு பெற்றது. நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. மேலும் அந்த ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கவுன்சிலர்கள் இருக்கிறார். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.

கைத்தறி நெசவு மற்றும் விவசாயம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முதன்மையான தொழில். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் சுந்தரபாண்டியம் ஆகிய நான்கு கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இலவச விநியோகத்திற்கான மாநில கைத்தறி உற்பத்தியில் தறிகள் 25% ஆகும். இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றது. மிகப் பிரபலமான துணி விற்பனை செய்யும் நிறுவனம் போத்தீஸ் முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில்தான் துவங்கப்பட்டது. நெசவுத் தொழிலாளர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று அழைக்கப்படும் பால் இனிப்புக்கு பெயர் பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பிற உள்ளூர் விற்பனையாளர்கள் 1970 களில் வெண்மை புரட்சிக்குப் பிறகு 1977 முதல் இனிப்பு உற்பத்தியைத் தொடங்கினர். இத்தொழில் நகரத்தின் குடிமக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதன் தனிச்சிறப்பு இதன் சுவையேயாகும். இங்குள்ள பசுக்களின் பால் தரும் ருசி இந்த இனிப்பின் தரத்தை உயர்த்துகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இவ்வூர் அமைந்துள்ளதால் இவ்வூரின் பசுக்களின் பால் சுவைமிக்கதாக இருக்கலாம். இங்கு தயாரிக்கப்படும் பால்கோவா இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும்,வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக ஜெபிப்போம்.

இந்த நகரத்தில் மொத்தம் 293,209 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 146,005 ஆண்களும், 147,204 பெண்களும் உள்ளனர். கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 48.9% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.52%, இசுலாமியர்கள் 2.06%, கிறித்தவர்கள் 4.14% மற்றும் பிற மதத்தினர் 0.28% ஆகவுள்ளனர். இந்த நகராட்சியில் மொத்தம் 82,678 குடும்பங்கள் இருக்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இப்பகுதியில் மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்படி ஜெபிப்போம். வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். அவர்கள் கர்த்தருக்கென்று எழும்பி பிரகாசிக்க ஜெபிப்போம். குடும்பங்களில் தெய்வீக சமாதானம் உண்டாக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.