No products in the cart.
தினம் ஓர் ஊர் – மேட்டூர் (Mettur) – 13/08/24
தினம் ஓர் ஊர் – மேட்டூர் (Mettur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சேலம்
பரப்பளவு – 14.55 சதுர கிலோமீட்டர்கள் (5.62 sq mi)
மக்கள் தொகை – 16,279
கல்வியறிவு – 79.68%
District Collector and District Magistrate – Dr. R. Brindha Devi, I.A.S.
Commissioner of Corporation – Bro. Ranjeet Singh, I.A.S.
Additional Collector – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,
Commissioner of Police – Sis. B. Vijayakumari,I.P.S.,
Superintendent of Police – Bro. A.K. Arun Kabilan, IPS.,
District Revenue Officer and
Additional District Magistrate – Dr. P. Menaha
Mettur Municipality Commissioner – Sis. V. Nithiya
Mettur Municipality Chairman – Bro. S.M.H. Abdul Salam
மக்களவைத் தொகுதி – தருமபுரி
சட்டமன்றத் தொகுதி – மேட்டூர்
மக்களவை உறுப்பினர் – Bro. A. Mani (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. Sadhasivam (MLA)
Principal District Judge – Sis. S.Sumathi (Salem)
District Munsif – Bro. R.Manivarman (Mettur)
Subordinate Judge – Sis. S.Priya (Mettur)
ஜெபிப்போம்
மேட்டூர் (Mettur), என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணைக்கு இது மிகவும் பிரபலமானது.
மேட்டூர் என்பது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொழில்துறை மற்றும் சுற்றுலா நகரமாகும். காவிரி ஆற்று படுகையில் உள்ள மக்கள் ஆற்று நீரின் ஏற்ற இறக்கத்தினால் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ தொடங்கினார்கள், மேடான பகுதியில் இருக்கும் ஊர் என்பதால் மேட்டூர் என அழைக்கப்படுகிறது.
இந்த நகராட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. S. Sadhasivam அவர்களுக்காகவும், தருமபுரி மக்களவை உறுப்பினர் Bro. A. Mani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் கரம் இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளிலும் ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.
மேட்டூர் வட்டம் 48 வருவாய் கிராமங்களையும், 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Mettur Municipality Commissioner Sis. V. Nithiya அவர்களுக்காகவும், Mettur Municipality Chairman Bro. S.M.H. Abdul Salam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
இந்நகரத்தின் மக்கள்தொகை மொத்தம் 52,813 ஆகும். இதில் இந்துக்கள் 88.43% சதவீதமும், இசுலாமியர்கள் 3.58% சதவீதமும், கிறித்தவர்கள் 7.72% சதவீதமும் , மற்றும் பிற மதத்தினர் 0.28% சதவீத மக்கள் வாழ்கின்றார்கள். மேட்டூர் நகராட்சியில் மொத்தம் 14,282 குடும்பங்கள் இருக்கிறார்கள். மேட்டூர் வாழ் மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.
மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது. அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது.
மேட்டூர் அணையில் 2 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அதன் மின் உற்பத்தி, இரசாயன உற்பத்தி மற்றும் அலுமினிய உற்பத்திக்கு பெயர் பெற்றது. தமிழகத்தின் பாசனத் தேவைகளில் பெரும்பாலானவை மேட்டூர் அணையின் மூலம் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் முதன்மையான மின்சார ஆதாரங்களில் ஒன்று மேட்டூர். மேட்டூர் அனல் மின் நிலையம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) அடிப்படை சுமை மின் நிலையமாக செயல்படுகிறது.
மேட்டூர் “தமிழ்நாட்டின் அலுமினிய நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது. MALCO நிறுவனத்தால் இயக்கப்படும் அதன் அலுமினிய ஆலை, ஏற்காடு மற்றும் கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம்) ஆகிய இடங்களில் அதன் சொந்த பாக்சைட் சுரங்கங்களைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 55,000 டன்கள் (tpa) அலுமினா சுத்திகரிப்பு திறன் மற்றும் 29,500 tpa அலுமினியம் ஸ்மெல்ட்டர் திறன் கொண்ட, இந்தியாவில் உள்ள ஐந்து ஒருங்கிணைந்த முதன்மை அலுமினிய உற்பத்தியாளர்களில் நிறுவனம் ஒன்றாகும்.
மேட்டூரில் ஏராளமான தொழில்கள் உள்ளன. முக்கியமான ஒன்று இரசாயன உற்பத்தி: மேட்டூர் கெமிக்கல்ஸ் (இப்போது Chemplast என அழைக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இரசாயனங்கள், சோப்புகள் மற்றும் தொழில்துறை வாயுக்களை உற்பத்தி செய்யும் நான்கு பெரிய ஆலைகள் உள்ளன. முக்கிய அலுமினிய உற்பத்தியாளர்களில் ஒருவரான MALCO, ஒரு பிரபலமான மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்நிலைப் பள்ளியை நடத்துகிறது. SAIL இன் சேலம் உருக்கு ஆலை அருகில் உள்ளது.
மேட்டூர் நகராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். மேட்டூர் நகரத்தில் வாழும் மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவர ஜெபிப்போம். இயேசுகிறிஸ்துவை பற்றி அறியாத மக்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.