Daily Updates

தினம் ஓர் ஊர் – பெருந்துறை (Perundurai) – 01/08/24

தினம் ஓர் ஊர் – பெருந்துறை (Perundurai)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – ஈரோடு

பரப்பளவு – 23.39 சதுர கிலோமீட்டர்கள் (9.03 sq mi)

மக்கள் தொகை – 266,106

கல்வியறிவு – 73.19%

District Collector – Bro. Raja Gopal Sunkara I.A.S.

Superintendent of Police – Bro. G. Jawahar, I.P.S.

District Revenue Officer – Bro. S. Santhakumar

Municipality Commissioner – Bro. Dr.Manish.N. I.A.S.

Revenue Divisional Officer – Bro. M. Sathish Kumar (Erode)

District Forest Officer  – Bro. Kumili Venkata Appala Naidu, I.F.S.

மக்களவைத் தொகுதி – திருப்பூர்

சட்டமன்றத் தொகுதி – பெருந்துறை

மக்களவை உறுப்பினர் – Bro. K Subbarayan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. E. R. E Jayakumar (MLA)

பேரூராட்சி தலைவர் – சகோ. ராஜேந்திரன்

Principal District and

Sessions Judge – Bro. B.Murugesan (Erode)

Subordinate Judge – Sis. K.Krishnapriya (Perundurai)

District Munsif – Sis. K.L. Priyanga (Perundurai)

Judicial Magistrate – Sis. S.Vipicee (Perundurai)

ஜெபிப்போம்

பெருந்துறை என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு கிரேடு பேரூராட்சி ஆகும்.  மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் பெருந்துறை மட்டுமே சிறப்பு தர நகர பஞ்சாயத்து ஆகும். பெருந்துறை நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் SEZ வளாகத்துடன் தொழில்துறை மையமாக வளர்ந்துள்ளது. இது ஆசியாவின் இரண்டாவது பெரிய SIPCOT ஆகும். ஈரோடு மாஸ்டர் பிளான்-1996ன் படி, பெருந்துறையை ஈரோட்டிற்கான செயற்கைக்கோள் நகரமாக உருவாக்க முன்மொழியப்பட்டது.

ஈரோடு மாநகரின் தென்மேற்குப் பகுதியில் பெருந்துறை அமைந்துள்ளது. ஈரோடு சந்திப்பிலிருந்தும் சுமார் 18 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெருந்துறை திருப்பூரிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், கோயம்புத்தூர் மற்றும் சேலத்திலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், காங்கயத்திலிருந்து முறையே 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது .

மாவட்ட ஆட்சியர் Bro. Raja Gopal Sunkara அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. G. Jawahar அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. S. Santhakumar அவர்களுக்காகவும், Principal District and Sessions Judge Bro. B.Murugesan அவர்களுக்காகவும், Subordinate Judge Sis. K.Krishnapriya அவர்களுக்காகவும், District Munsif  Sis. K.L. Priyanga அவர்களுக்காகவும், Judicial Magistrate Sis. S.Vipicee அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

பெருந்துறை வட்டம், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் பெருந்துறை, காஞ்சிக்கோயில், சென்னிமலை, திங்களூர், வடமுகம் வெள்ளோடு ஊராட்சி என உளவட்டங்களும், 89 வருவாய் கிராமங்களும் உள்ளது. இவ்வட்டத்தில் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இப்பேரூராட்சி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் Bro. E. R. E Jayakumar அவர்களுக்காகவும், திருப்பூர் மக்களவை உறுப்பினர் Bro. K Subbarayan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த நகரமானது 23.39 ச.கி.மீ. பரப்பளவும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 103 தெருக்களையும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காகவும், பேரூராட்சி தலைவர் சகோ. ராஜேந்திரன் அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பொறுப்புகளை உண்மையாக நிறைவேற ஜெபிப்போம்.

இவ்வட்டம் 266,106 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 134,270 ஆண்களும், 131,836 பெண்களும் உள்ளனர். 78,922 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 53.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.33% , இசுலாமியர்கள் 1.61% , கிறித்தவர்கள் 2.91% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) எனப்படும் தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்துக்கான சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பொறியியல் தயாரிப்புகளுக்கான சிறப்பு பொருளாதார மண்டலமும் இங்கு அமைந்துள்ளது. இங்கு பின்னலாடை தொழில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மேலும் விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்படும் ஐஆர்டிடி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அங்கு அமைந்துள்ளது. மாநில அரசு ஐஆர்டி மருத்துவக் கல்லூரியை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக மாற்றியது. இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

பெருந்துறை வட்டத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். நகரத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். சுவிசேஷம் அறியாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். பெருந்துறையில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.