No products in the cart.
தினம் ஓர் ஊர் – புள்ளம்பாடி (Pullampadi) – 14/06/24
தினம் ஓர் ஊர் – புள்ளம்பாடி (Pullampadi)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருச்சிராப்பள்ளி
மக்கள் தொகை – 10,241
கல்வியறிவு – 72%
மக்களவைத் தொகுதி – பெரம்பலூர்
சட்டமன்றத் தொகுதி – இலால்குடி
District Collector – Bro. M.Pradeep Kumar (IAS)
Assistant Collector – Bro. J.E.Padmaja (IAS)
Commissioner of Police – Sis. N. Kamini (IPS)
Superintendent of Police – Bro. V. Varunkumar (IPS)
District Revenue Officer – Sis. R. Rajalakshmi
Project Director – Bro. S. Devanathan
மக்களவை உறுப்பினர் – Bro. Arun Nehru (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. Soundara Pandian (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. V. Kumar
நகராட்சி தலைவர் – P.Duraimanickam
நகராட்சி துணைதலைவர் – R. Suguna Rajmohan
Principal District Judge – Bro. K.Babu
Principal District Munsif – Bro. Thiru.S.Rajkumar (Lalgudi)
Additional District Munsif – Sis. M.Abinaya (Lalgudi)
Sub Judge – Bro. S.Vijayakumar (Lalgudi)
ஜெபிப்போம்
புள்ளம்பாடி (Pullampadi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். புள்ளம்பாடி பேருராட்சி, லால்குடி – அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
புள்ளம்பாடி கிராமம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரப் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தப்பட்டது. புல்லின்பாடி என்ற பெயர் பறவைகளின் கிராமம் என்று பொருள்படும் “புல்லினம்பாடி” என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.
புள்ளம்பாடி பேரூராட்சி லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. லால்குடி சட்டமன்ற உறுப்பினர் Bro. A. Soundara Pandian அவர்களுக்காகவும், பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் Bro. Arun Nehru அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளையும் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்டுள்ளது. நகராட்சி ஆணையர் Bro. V. Kumar அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் P.Duraimanickam அவர்களுக்காகவும், நகராட்சி துணைதலைவர் R. Suguna Rajmohan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். 15 வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
புள்ளம்பாடி பேரூராட்சி 10,241 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள் தொகையில் ஆண்கள் 49% மற்றும் பெண்கள் 51% உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 2628 குடும்பங்கள் வசிக்கின்றனர். புள்ளம்பாடியின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆக உள்ளது.
இப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது மற்றும் நெல் முக்கிய பயிராக உள்ளது. புள்ளம்பாடி கால்வாய் நகரின் வழியாக செல்கிறது. புள்ளம்பாடி கால்வாய் திட்டப் பணிகள் 1956-57ல் தொடங்கப்பட்டன. இந்த கால்வாய் 1960 களில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் திரு.கே.காமராஜ் அவர்களால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
புள்ளம்பாடி பேரூராட்சியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்காகவும், செவிலியர் பயிற்சி நிலையங்களுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்காகவும், மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட சிதம்பரேஸ்வரர் கோயில் இப்பேரூராட்சியின் முக்கிய ஈர்ப்பாகும். கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் ஆரம்பகால சோழர் காலத்தில் பல வரலாற்று நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்றன.
புள்ளம்பாடி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.