No products in the cart.
தினம் ஓர் ஊர்-பள்ளப்பட்டி (Pallapatti) – 28/06/24
தினம் ஓர் ஊர்-பள்ளப்பட்டி (Pallapatti)
மாநிலம்-தமிழ்நாடு
மாவட்டம்-கரூர்
மக்கள் தொகை-30,624
கல்வியறிவு-92.53%
மக்களவைத் தொகுதி-கரூர்
சட்டமன்றத் தொகுதி-அரவக்குறிச்சி
District Collector-Bro. M. Thangavel, I.A.S
Superintendent of Police-Bro. Prabhakar
District Revenue Officer-Bro. M. Kannan
Project Director-Sis. Sreelekha Thamilchelvan
மக்களவை உறுப்பினர்-Sis. Jothimani (MP)
சட்டமன்ற உறுப்பினர்-Bro. R. Elango (MLA)
Mayor-Sis. Kavitha Ganesan
Corporation Commissioner-Bro. N. Ravichandran
Deputy Mayor-Bro. Dharani Saravanan
District Judge -Bro. R. Shanmuga Sundaram
Chief Judicial Magistrate (Karur)-Bro. C.Sornakumar
Principal District Munsif Judge (Karur)-Sis. T.P.Sridevi
District Munsif-CUM-Judicial Magistrate- Sis. Santhosham (Aravakurichi)
ஜெபிப்போம்
பள்ளப்பட்டி (Pallapatti) தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளுள் ஒன்றாகும். அரவக்குறிச்சி பேரூராட்சி அருகில், பள்ளப்பட்டி நகராட்சி அமைந்துள்ளது. நகராட்சியாக 2022 ஜனவரியில் தமிழக அரசு அறிவித்தது.
கரூர் – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்த பள்ளப்பட்டி, திண்டுக்கல்லிருந்து 47 கிமீ தொலைவிலும், கரூருக்கு தென்மேற்கே 37 கிமீ தொலைவில் உள்ளது. அரவக்குறிச்சிக்கு தெற்கே 7 கிமீ தொலைவில் பள்ளப்பட்டி நகராட்சி உள்ளது.
இந்த நகராட்சி 27 வார்டு உறுப்பினர்களைக் கொண்டது. நகராட்சியின் முதல் உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 2022 ல் நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவராக முனவர் ஜான் அவர்கள் பதவியேற்றார்கள். 27 வார்டுகளில் 31233 வாக்காளர் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் நகராட்சியின் மேயர் Sis. Kavitha Ganesan அவர்களுக்காகவும், Corporation Commissioner Bro. N. Ravichandran அவர்களுக்காகவும், Deputy Mayor Bro. Dharani Saravanan அவர்களுக்காகவும், District Judge Bro. R. Shanmuga Sundaram அவர்களுக்காகவும் ஜெபிபோம். இவர்கள் செய்கின்ற பணிகளில் தேவ சித்தம் நிறைவேறிட ஜெபிப்போம்.
பள்ளப்பட்டி நகராட்சி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Bro. R. Elango அவர்களுக்காகவும், கரூர் மக்களவை உறுப்பினர் Sis. Jothimani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
பள்ளப்பட்டி முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நகரமாகும், இது பாரம்பரிய மற்றும் கலாச்சார விழுமியங்களை தலைமுறை தலைமுறையாகக் கடத்துகிறது. பல மசூதிகள், ஒரு தேவாலயம் மற்றும் ஒரு கோவில் உள்ளன. பள்ளப்பட்டி பகுதியில் அமராவதி ஆற்றின் கிளை ஆறான நன்காஞ்சி ஆறு பாய்கிறது.
பள்ளப்பட்டி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 30,624 ஆகும். அதில் ஆண்கள் 15,069 (49%) ஆகவும்; பெண்கள் 15,555 (51%) ஆகவும் உள்ளனர். பள்ளப்பட்டியில் பெரும்பாலான மக்கள் தமிழ் மொழி பேசும் இசுலாமியர்களாக (94.90%) உள்ளனர்.
பள்ளப்பட்டி நகராட்சிக்காக ஜெபிப்போம். நகரத்தில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற பணிகளுக்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம். பள்ளப்பட்டியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.