Daily Updates

தினம் ஓர் ஊர் – திருப்புவனம்

தினம் ஓர் ஊர் – திருப்புவனம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சிவகங்கை
மக்கள் தொகை – 24,554
கல்வியறிவு – 77%
மக்களவைத் தொகுதி – சிவகங்கை
சட்டமன்றத் தொகுதி – மானாமதுரை
மக்களவை உறுப்பினர் – Bro. Karti P.Chidambaram (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Sis. A.Tamilarasi (MLA)
மாவட்ட ஆட்சியர் – Sis. Asha Ajith (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. S.Selvaraj (I.P.S)
District Revenue Officer – Bro. Shanmugavelu
நகராட்சி ஆணையர் – Bro. A.Kannan
நகராட்சி தலைவர் – Bro. S.Mariyappan Kennady
நகராட்சி துணை தலைவர் – Bro. S.Balasundaram
Police Officer – Sis. Anusha Manohari
Principal District and Sessions Judge – Bro. R.Gurumurthy (Sivagangai)
Additional District and Sessions Judge – Sis. R.Sathia Thara (Sivagangai)
Judicial Magistrate – Bro. R.Arun Pandian (Manamadurai)

ஜெபிப்போம்:-

திருப்புவனம் (Thirupuvanam), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருப்புவனம் என்பது ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ‘திருப்பூவணம்‘ என்ற பெயர் ‘Thiruppuvanam‘ என்று எழுதப் பெற்றுள்ளது. இதன்பின்னர் ஊரின் பெயரைத் தமிழிலில் ‘திரு‘ப்‘புவனம்‘ என்று எழுதியுள்ளனர். திருப்பூவணம் என்ற பெயரே தொன்மையான உண்மையான பெயர். திருப்புவனம் என்ற பெயர் 80 வருடங்களாக வழக்கில் உள்ளது. திருப்புவனம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த பேரூராட்சி 20 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 103 தெருக்களும் கொண்டுள்ளது. ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காக அவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சி மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மானாமதுரை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Sis. A.Tamilarasi அவர்களுக்காகவும், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Karti P.Chidambaram அவர்களுக்காகவும் ஜெபிப்போம். ஆவியானவரின் பாதுகாப்பு கரம் இவர்களோடு இருக்கும்படி ஜெபிப்போம்.

திருப்புவணம்-சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் (taluk) வட்டமாகும். திருப்புவனம் நகரின் மொத்த மக்கள் தொகை 24,554 ஆக உள்ளது. இதில் 12,333 ஆண்களும், 12,221 பெண்களும் உள்ளார்கள். இந்த பேரூராட்சியில் 6,240 குடும்பங்கள் வசிக்கின்றன. திருப்புவனத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

திருப்புவனம் கல்வியறிவு விகிதம் 89.8% சதவீதம் ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 94.67% சதவீதமும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 84.92% சதவீதமாக உள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் அவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

திருபுவனத்தில் விவசாயம் தொழில் அதிக அளவில் செய்யப்படுகிறது. விவசாய தொழில் செய்யும் ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பங்களையும் கர்த்தர் பாதுகாத்துக் கொள்ள ஜெபிப்போம். விவசாயத்துக்கு தேவையான தண்ணீர், இயற்கை சூழ்நிலைகள் எல்லாம் கர்த்தர் மாற்றி கொடுக்கவும், அவர்களின் குடும்ப பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.