No products in the cart.
தினம் ஓர் ஊர் – திருச்சுழி (Tiruchuli) – 09/01/25
தினம் ஓர் ஊர் – திருச்சுழி (Tiruchuli)
மாவட்டம் – விருதுநகர்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – விருதுநகர்
மக்கள் தொகை – 103,290
கல்வியறிவு – 74.53%
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L. Pitchi (I.P.S)
District Revenue Officer – Bro. R Rajendran (Virudhunagar)
மக்களவை உறுப்பினர் – Bro. Kani K.Navas (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thangam Thennarasu (MLA)
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – திருச்சுழி
நகராட்சி ஆணையர் – Sis. M.Sugandhi (Virudhunagar)
நகராட்சி தலைவர் – Bro. R.Madhavan (Virudhunagar)
நகராட்சி துணை தலைவர் – Sis. T.Dhanalakshmi
Principal District Judge – Bro. K.Jeyakumar
ஜெபிப்போம்
திருச்சுழி (Tiruchuli) தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்ட தலைநகர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்தது. திருச்சுழி அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும். திருச்சுழி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த ஊர் அருப்புக்கோட்டைக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், இரமண மகரிசி அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள திருச்சுழி திருமேனிநாதர் கோயில் சிவாலயம், தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது.
ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் ‘உயிரி எரிபொருள்’ மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது.
திருச்சுழி வட்டம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்சுழி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் திருச்சுழி, அ. முக்குளம், நரிக்குடி, வீரசோழன் என 4 உள்வட்டங்களும், 150 வருவாய் கிராமங்கள் உள்ளன. திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆகியவை இவ்வட்டத்தில் உள்ளது
திருச்சுழி சட்டமன்றத் உறுப்பினர் Bro. Thangam Thennarasu அவர்களுக்காகவும், இராமநாதபுரம் மக்களவைத் உறுப்பினர் Bro. Kani K.Navas அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்காகவும், இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
திருச்சுழி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். மேலும் திருச்சுளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பணிபுரியும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இங்கு வசிக்கின்றனர். இங்கு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக அவர்களின் தொழிலை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். இந்த நகரத்தில் வசிக்கும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்காக மற்றும் படிக்கும் பிள்ளைகளுக்காக, பள்ளி ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம்.
இவ்வட்டத்தின் மொத்தம் மக்கள் 103,290 ஆக உள்ளது. இதில் 52,072 ஆண்களும், 51,218 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 80% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 25,806 குடும்பங்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.04% பேரும், இசுலாமியர்கள் 4.22% பேரும், கிறித்தவர்கள் 0.54% பேரும் மற்றும் பிற மதத்தினர் 0.20% பேரும் இருக்கிறார்கள். இங்கு வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
திருச்சுழி நகராட்சிக்காக ஜெபிப்போம். திருச்சுழி நகராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். குடும்பங்களின் தேவைகள் சந்திக்கப்ட ஜெபிப்போம். அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். திருச்சுழி நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். திருச்சுழி நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.