No products in the cart.
தினம் ஓர் ஊர் – சோளூர் (Sholur) – 25/01/25
தினம் ஓர் ஊர் – சோளூர் (Sholur)
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – உதகமண்டலம்
மாநிலம் – தமிழ்நாடு
பரப்பளவு – 35.80 சதுர கிலோமீட்டர்கள் (13.82 sq mi)
மக்கள் தொகை – 9745
கல்வியறிவு – 74.00 %
மாவட்ட ஆட்சியர் – Sis. Lakshmi Bhavya Tanneeru I.A.S.,
Superintendent of Police – Sis. N.S. Nisha I.P.S.,
Additional Collector (Dev) /
Project Director, DRDA /
Project Director, SADP – Bro. H.R. Koushik I.A.S.,
District Revenue Officer – Bro. M. Narayanan
மக்களவைத் தொகுதி – நீலகிரி
சட்டமன்றத் தொகுதி – உதகமண்டலம்
மக்களவை உறுப்பினர் – Bro. A. Raja (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. R. Ganesh (MLA)
Chairperson – Sis. M.Vanieshwari
Vice Chairman – Bro. J.Ravikumar
District Munsif Kothagiri, Coonoor
and District Court of Nilgiris – Bro. Duraisamy
District Judge – Bro. N. Muralidharan (Udhagamandalam)
ஜெபிப்போம்
சோளூர் (Sholur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சோளூர் பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் நடுவட்டம் 16 கிமீ; நஞ்சநாடு ஊராட்சி 9 கிமீ, உல்லாத்தி ஊராட்சி, மசினகுடி ஊராட்சி 42 கிமீ தொலைவிலும் உள்ளது. 7 கிமீ உள்ளது.
இந்த கிராமம் ஊரட்டி, கொட்டாட்டி, பிக்கைகண்டி, ஹோசஹட்டி, தத்தனேரி மற்றும் பேக்கோடை ஆகிய ஆறு சிறிய குக்கிராமங்களைக் கொண்டுள்ளது. அனைத்து குக்கிராமங்களுக்கும் பொதுவான சந்திப்பு நகரத்தனை ஆகும், இது கிராமத்தின் நுழைவாயிலாகவும் உள்ளது.
சோலூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியின் Chairperson Sis. M.Vanieshwari அவர்களுக்காகவும், Vice Chairman Bro. J.Ravikumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரம் உதகமண்டலம் சட்டமன்ற தொகுதிக்கும், நீலகிரி மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. R. Ganesh அவர்களுக்காகவும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. A. Raja அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம். இவர்களின் குடும்பத்தினர்களுக்காக ஜெபிப்போம்.
ஷோலூர் டவுன் பஞ்சாயத்தில் 9,745 மக்கள் தொகை உள்ளது, இதில் 4,750 ஆண்கள் மற்றும் 4,995 பெண்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 986 ஆகும். இப்பேரூராட்சி 2762 குடும்பங்கள் உள்ளனர். ஷோலூரில், ஆண்களின் கல்வியறிவு 85.14% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 63.40% ஆகவும் உள்ளது. பெரும்பாலான மக்கள் தாய் மொழி படாகா பேசுகிறார்கள். இந்து 94.73%, முஸ்லிம் 1.83%, கிறிஸ்தவர்கள் 3.35%, சீக்கியர் 0.03%, பௌத்த 0.01% மற்றும் ஜெயின் 0.05% உள்ளனர்.
சோலூரில் உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட் மற்றும் பூண்டு போன்ற பருவகால காய்கறிகளை உற்பத்தி செய்கிறது. மொத்த மக்கள் தொகையில், 5,402 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,903 ஆண்கள் மற்றும் 2,499 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம்.
சோளூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். சோளூர் நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். சோளூர் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.