Daily Updates

தினம் ஓர் ஊர் – சுந்தரபாண்டிபுரம் (Sundarapandiapuram) – 12/03/25

தினம் ஓர் ஊர் – சுந்தரபாண்டிபுரம் (Sundarapandiapuram)

மாவட்டம் – தென்காசி

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 8988

கல்வியறிவு – 65%

மாவட்ட ஆட்சியர் – Bro. Dr. G.S.Sameeran, I.A.S

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – Bro. Aravind, T.P.S.,

District Revenue Inspector – Bro. M.Nagaranjan

மக்களவைத் தொகுதி – தென்காசி

சட்டமன்றத் தொகுதி – தென்காசி

Principal District Judge  – Bro. B. Rajavel (Tenkasi)

Additional District Judge – Bro. S. Manojkumar (Tenkasi)

Chief Judicial Magistrate  – Bro. C.Kathiravan (Tenkasi)

ஜெபிப்போம்

சுந்தரபாண்டிபுரம் (Sundarapandiapuram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை பேருராட்சி ஆகும். இது அதன் அழகிய சூரியகாந்தி வயல்களுக்கு மிகவும் பிரபலமானது. மேலும் பழமையான கோவில்கள் மற்றும் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது. இது பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் பிராந்திய சிட்காம்களுக்கான பிரபலமான அமைப்பாகும்.

இந்த பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 55 கிமீ தொலைவிலும்; தென்காசியிலிருந்து 10 கிமீ தொலைவிலும்;சுரண்டையிலிருந்து 3 கிமீ தொலைவிலும்; சாம்பவர் வடகரையிலிருந்து 4 கிமீ தொலைவிலும்; பாவூர்சத்திரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.

சுந்தரபாண்டிபுரம் 13.18 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும், 2532 வீடுகளையும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

இப்பேரூராட்சியில் மொத்தம் 8988 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள், 50% பேர் உள்ளார்கள். இது நகரத்தின் சராசரி கல்வியறிவு 65% ஆக உள்ளது. இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

இந்த கிராமத்தின் முக்கிய பொருளாதாரம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகும். முக்கிய பயிர்கள் நெல் நெல், சூரியகாந்தி விதைகள், பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தென்னை விவசாயம் ஆகும். இங்கு வாழும் மக்களின் பிராதன தொழிலாக விவசாயமே ஆதிமுதல் இன்று வரை உள்ளது. அதற்கு மூல காரணமாக இங்கு அமைந்த பெரிய குளமே ஆகும்.

இவ்வூரின் மக்கள் தத்தமது குல தொழில்களையும் (மட்பாண்டம் செய்தல், தயிர் கடைதல், மீன்பிடித்தல், கூடைமுடைதல் போன்ற தொழில்களையும்) செய்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். பல்வேறு தொழில்களை செய்கின்ற மக்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் ஆசீர்வதித்து பாதுகாத்துகொள்ளும்படி ஜெபிப்போம்.

சுந்தரபாண்டிபுரம் அதிகளவில் பசுமை போர்த்திய வயல்வெளிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள் நிறைந்துள்ளதால் தமிழக மற்றும் வெளிமாநில திரைப்படத்துறையினரின் மிகமிக விருப்பம்மான தளமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியபுரம் சூரியகாந்தி வயலுக்குப் பெயர்பெற்றது.

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள வாலிப பிள்ளைகளுக்காக, சிறுபிள்ளைகளுக்காக ஜெபிப்போம். இவர்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.