No products in the cart.

தினம் ஓர் ஊர் – சின்னமனூர் (Chinnamanur) – 13/10/23
தினம் ஓர் ஊர் – சின்னமனூர் (Chinnamanur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 42,305
கல்வியறிவு – 83.5%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – கம்பம்
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Eramakrishnan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. T.T.Gopinath
நகராட்சி தலைவர் – Sis. R.Ayyammal
நகராட்சி துணை தலைவர் – Bro. N.Muthukumar
Municipal Engineer – Bro. M.Panneer
Sanitary Inspector – Bro. S. Palpandi
Town planning Inspector – Bro. M.Thangaraj
Revenue Inspector – Bro. P. Vasagam
Principal District Judge – Sis. K. Arivoli
Judicial Magistrate – Bro. A.Ramanathan (Uthamapalayam)
Subordinate Judge – Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)
District Munsif – Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)
ஜெபிப்போம்
சின்னமனூர் (Chinnamanur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இந்த நகராட்சியின் சங்க கால பெயர் அரிகேசநல்லூர் ஆகும். தெலுங்கு நாயக்கர்களின் வருகைக்கு பின்பு அரிகேசநல்லூர் சின்னமனூர் என்று பெயர் மாற்றப்பட்டது. இவர் இராணிமங்கம்மாளின் பாதுகாப்பாளாராக இருந்த சின்னமநாயக்கர் என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர். காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் சின்னமனூர் என்று மருவியது. சின்னமனூர் நகராட்சிக்காக ஜெபிப்போம்.
1885 முதல் சின்னமனூரில் கிராம பஞ்சாயத்து அமைக்கப்பட்டது, பின்னர் 1947 முதல் டவுன் பஞ்சாயத்து ஆக தரம் உயர்த்தப்பட்டது. பழைய டவுன் பஞ்சாயத்து 01.04.77 முதல் III கிரேடு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 29.03.84 முதல் II தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சி ஆணையர் Bro. T.T.Gopinath அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. R.Ayyammal அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. N.Muthukumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். சின்னமனூர் நகராட்சியின் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
சின்னமனூர் நகராட்சி கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Eramakrishnan அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் உறுப்பினர் Bro. P.Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் கடமையை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.
சின்னமனூர் 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது, மேலும் இந்நகரத்தின் மக்கள்தொகை 42,305 ஆகும். அதில் 21,081 ஆண்களும், 21,224 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.57%, இசுலாமியர்கள் 7.55%, கிறித்தவர்கள் 1.81% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர். இந்த நகராட்சியில் மொத்தம் 11,545 குடும்பங்கள் வாழ்கிறார்கள். சின்னமனூர் நகரத்தில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். இங்குள்ள குடும்பங்களை கர்த்தருடைய பாதுகாப்பு கரத்திற்குள் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
இந்த நகரம் மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாகும், சின்னமனூர் சமீப காலமாக வாழைப்பழ விற்பனைக்கு பெயர் பெற்றது. சின்னமனூரில் இருபதுக்கும் மேற்பட்ட யூனிட்களில் இருந்து பதப்படுத்தப்பட்ட வாழைப்பழம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேனி மாவட்டம் முழுவதும் சின்னமனூரில்தான் அதிக நகைக்கடைகள் உள்ளன. சின்னமனூர் மக்கள்தொகை அடிப்படையில் மாவட்டத்தில் நான்காவது பெரிய நகரமாகவும், பரப்பளவில் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது.
செப்பேடு புகழ்பெற்ற சின்னமனூர் நகரானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தை புகழ் பெற்றதாகும். இந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக ஜெபிப்போம்.
இந்த நகராட்சியில் இரண்டு அரசு உதவிபெறும் (KVA பெண்கள் Hr. Sec. பள்ளி மற்றும் SKA ஆண்கள் மேல்நிலைப் பள்ளி) உட்பட நான்கு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. SKA ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பல அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டுள்ளது மற்றும் இது சின்னமனூரில் உள்ள ஒரே ஆண்கள் பள்ளியாகும். இரண்டு தனியார் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் (காயத்ரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் CNMSS) மேயூர் ராம் மெட்ரிகுலேஷன் பள்ளி. பல உயர்நிலைப் பள்ளிகள் மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு வரை (நல்லி மெட்ரிகுலேஷன் பள்ளி & தாய் மெட்ரிக் பள்ளி) தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் கல்வியை வழங்குகின்றன. இரண்டு பெரிய நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. நகரின் கிழக்கு புறநகரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று உள்ளது. சின்னமனூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்காக ஜெபிப்போம்.