No products in the cart.
தினம் ஓர் ஊர் – சின்னக்கம்பாளையம் (Chinnakkampalayam) – 01/10/24
தினம் ஓர் ஊர் – சின்னக்கம்பாளையம் (Chinnakkampalayam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருப்பூர்
வட்டம் – தாராபுரம்
பரப்பளவு – 32.30 சதுர கிலோமீட்டர்கள் (12.47 sq mi)
மக்கள் தொகை – 11,546
கல்வியறிவு – 63.37%
District Collector – Bro. T Christuraj , I.A.S
District Revenue Officer – Bro. K Karthikeyan
Commissioner of Police – Sis. Lakshmi IPS
Superintendent of Police – Bro. Abhishek Gupta IPS
Municipal Commissioner – Bro. P.Thirumalselvam
Municipal Chairman – Bro. Pappukanan
Municipal Vice – Chairman – Bro. Ravichandran
மக்களவைத் தொகுதி – ஈரோடு
சட்டமன்றத் தொகுதி – தாராபுரம்
மக்களவை உறுப்பினர் – Bro. Prakash (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Sis. N. Kayalvizhi (MLA)
Principal District and Sessions Judge – Bro. N.Gunasekaran (Tiruppur)
District Munsif – Sis. Mathivathani Vanangamudi (Dharapuram)
Sub Judge – Bro. K.Sakthivel (Dharapuram)
ஜெபிப்போம்
சின்னக்கம்பாளையம் (Chinnakkampalayam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். தாராபுரம் – உடுமலைப்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் சின்னக்கம்பாளையம் பேரூராட்சி உள்ளது.
இப்பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 63 கிமீ தொலைவில் உள்ளது. இதன் மேற்கில் 24 கி.மீ. தூரத்தில் உடுமலைப்பேட்டை நகரமும், கிழக்கில் 8 கி.மீ. தூரத்தில் தாராபுரம் நகரமும், வடக்கில் 24 கி.மீ. தூரத்தில் குண்டடமும், தெற்கில் 35 கி.மீ. தூரத்தில் பழனி நகரமும் உள்ளது.
சின்னக்காம்பாளையம் நகர் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியின் Municipal Commissioner Bro. P.Thirumalselvam அவர்களுக்காகவும், Municipal Chairman Bro. Pappukanan அவர்களுக்காகவும், Vice – Chairman Bro. Ravichandran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சி தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் Sis. N. Kayalvizhi அவர்களுக்காகவும், ஈரோடு மக்களவை உறுப்பினர் Bro. Prakash அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 32.30ச.கி.மீ. காங்கயம்பாளையம், செலாம்பாளையம் மற்றும் சின்னக்காம்பாளையம் ஆகிய மூன்று வருவாய் கிராமங்கள் இப்பேரூராட்சியில் அடங்கியுள்ளன. 12 குக்கிராமங்களையும் இப்பேரூராட்சி கொண்டுள்ளது.
இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 11546 பேர் ஆகும் இதில் ஆண்கள் 5772 மற்றும் பெண்கள் 5774 பேர்கள் ஆகும். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 820 ஆகும். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 95.95%, முஸ்லீம்கள் 0.49% மற்றும் கிறிஸ்தவர்கள் 2.78% உள்ளனர்.சின்னக்கம்பாளையத்தில் ஆண்களின் கல்வியறிவு 72.63% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 54.18% ஆகவும் உள்ளது. சின்னக்காம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 3,445 வீடுகளுக்கு குடிநீர், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன.
சின்னக்காம்பாளையம் பேரூராட்சியின் எல்லைக்குள் அஞ்சலகம், தொலைபேசி அலுவலகம் ஆகிய மத்திய அரசு அலுவலகங்களும் உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நூலகம் ஆகியவையும், கல்வி வசதிக்காக உயர்நிலைப் பள்ளி இரண்டும், நடுநிலைப் பள்ளி மூன்றும், ஆறு ஆரம்பப்பள்ளிகளும் உள்ளது.
இப்பேரூராட்சியைச் சுற்றிலும் சுமார் 16 கி.மீ. தூரத்திற்குள் கரும்பு மற்றும் நெல் ஆகியவைகளின் உற்பத்தி மிகவும் அதிக அளவில் உள்ளது. இப்பேரூராட்சி பகுதி முழுவதும் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. மேலும் காவிரிக் கூட்டு குடிநீர் திட்டத்தின்மூலமும் இப்பேரூராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பகுதியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். சின்னக்காம்பாளையம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.