Daily Updates

தினம் ஓர் ஊர் – குன்னூர் (Coonoor) – 17/01/25

தினம் ஓர் ஊர் – குன்னூர் (Coonoor)

மாவட்டம் – நீலகிரி

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 45,494

கல்வியறிவு – 84.79%

மாவட்ட ஆட்சியர் – Sis. Lakshmi Bhavya Tanneeru I.A.S.,

Superintendent of Police  – Sis. N.S. Nisha I.P.S.,

Additional Collector (Dev) /

Project Director, DRDA /

Project Director, SADP  – Bro. H.R. Koushik I.A.S.,

District Revenue Officer – Bro. M. Narayanan

மக்களவைத் தொகுதி – நீலகிரி

சட்டமன்றத் தொகுதி – குன்னூர்

மக்களவை உறுப்பினர் – Bro. A. Raja (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. K. Ramachandran (MLA)

Commissioner  – Bro. M. ILAMPARITHI

Chairperson  – Sis. J. Sheela Catharine (Coonoor)

Vice Chairman – Bro. M. Wasim Raja (Coonoor)

District Munsif Kothagiri, Coonoor

and District Court of Nilgiris – Bro. Duraisamy

Judicial Magistrate – Sis. R. Geetha (Coonoor)

Judicial Magistrate – Bro. R.Abdulsalam (Coonoor)

ஜெபிப்போம்

குன்னூர் (Coonoor) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 1502 மீட்டர் (4927 அடி) உயரத்தில் இருக்கின்றது. நீலகிரி மலையில் உதகமண்டலத்திற்கு அடுத்த பெரிய ஊரும் இதுவே ஆகும். இதன் ஊரின் சரியான தமிழ்ப்பெயர் குன்றூர். சங்ககாலத்தில் வேளிர் குடியினர் இந்த ஊரில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தொன்முது வேளிர் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நகரம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கும், நீலகிரி மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. குன்னூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. K. Ramachandran அவர்களுக்காகவும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. A. Raja அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம். இவர்களின் குடும்பத்தினர்களுக்காக ஜெபிப்போம்.

குன்னூர் நகராட்சி ஆணையர் Bro. M. ILAMPARITHI அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. J. Sheela Catharine அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Bro. M. Wasim Raja அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணிகளை உண்மையாக செய்ய ஜெபிப்போம்.

குன்னூர் தொகுதியில் அதிகரட்டி , பர்லியார் , குன்னூர் டவுன், எடப்பள்ளி , ஹப்பத்தலை , ஹுல்லிக்கல் , கெட்டி , மேலூர் ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன . குன்னூர் நகராட்சி 30 வார்டுகளை கொண்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டுவருகிறது.  குன்னூர் கிராமங்களில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

இந்த நகரம் 12,384 வீடுகளும், 45,494 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. இந்த மக்கள்தொகையில் இந்து 61.81% சதவீதமும், கிறிஸ்துவர்கள் 23.99% சதவீதமும், முஸ்லிம் 13.01% சதவீதமும், மற்றவை மதத்தினர் 1.19% வாழ்கின்றார்கள். குன்னூரில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

குன்னூர் நகரம் இரண்டு புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது – கீழ் குன்னூர் மற்றும் மேல் குன்னூர். மேல் குன்னூரில் UPASI, Bedford மற்றும் Sim’s Park போன்ற இடங்கள் உள்ளன . சிம்ஸ் பூங்காவில் 1,000க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. தாவரவியல் பூங்கா ஓரளவு ஜப்பானிய பாணியில் உருவாக்கப்பட்டது மற்றும் 1874 இல் மெட்ராஸ் கிளப்பின் செயலாளரான ஜேடி சிம் என்பவரிடமிருந்து அதன் பெயரைப் பெற்றது.

Pomological Station என்பது மாநில வேளாண்மைத் துறையின் பேரிச்சம்பழம், மாதுளை மற்றும் பாதாமி பழங்களுக்கான ஆராய்ச்சி மையமாகும். சிம்ஸ் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட் 1907 இல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ரேபிஸ் தடுப்பூசியை உருவாக்குகிறது . மத்திய பட்டு வாரியம் அதன் பட்டுப்புழு வளர்ப்பு நிலையம் (மத்திய பட்டுப்புழு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்-மைசூருவின் செயற்கைக்கோள் பட்டுப்புழு வளர்ப்பு நிலையம்) ஸ்பிரிங்ஃபீல்டில் மாநில அரசின் பட்டுப் பண்ணையைத் தவிர. சமீபத்தில், மலர் வளர்ப்பு மற்றும் ஸ்ட்ராபெரி சாகுபடி வேரூன்றியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள புகழ்வாய்ந்த மலைப் பிரதேசமும், நகருமான குன்னூரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்தத் தொடருந்து நிலையம் நீலகிரி மலைத் தொடர் வண்டிப் பாதையின், ஒரு பகுதியாகும். இந்த தொடருந்து நிலையம் ஒரு உலக பாரம்பரியக் களமாகும். இந்த தொடருந்து நிலையம் 115 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குன்னூரில் லாம்ப் பாறை, சிம்ஸ் பூங்கா, துரூக் கோட்டை, குன்னூர் லாவ்ஸ் அருவி, கடேரி அருவி லேடி கன்னிங்ஸ் சீட் ஆகியவை முக்கியமான சுற்றுலாத் தலங்களாக அமைந்துள்ளது.

குன்னூர் நகராட்சிக்காக ஜெபிப்போம். குன்னூர் நகராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். குன்னூர் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். குன்னூர் நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.