No products in the cart.

தினம் ஓர் ஊர்-குடவாசல் (Kodavasal) – 30/11/23
தினம் ஓர் ஊர்-குடவாசல் (Kodavasal)
மாநிலம்-தமிழ்நாடு
மாவட்டம்-திருவாரூர்
மக்கள் தொகை-205,625
கல்வியறிவு-89.6%
மக்களவைத் தொகுதி-நாகப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதி-நன்னிலம்
District Collector-Sis. T.Charusree (I.A.S)
Additional Collector (Development) /
Project Director-Sis. S. Priyanka (I.A.S)
The Superintendent of Police -Bro. S. Jeyakumar (I.P.S)
District Revenue Officer -Bro. K.Shanmuganathan
மக்களவை உறுப்பினர்-Bro. M.Selvarasu (MP)
சட்டமன்ற உறுப்பினர்-Bro. R.Kamaraj (MLA)
நகராட்சி ஆணையர்-Sis. Malligha
நகராட்சி தலைவர்- Sis. S.Bhuvanapriya
நகராட்சி துணை தலைவர்-Sis. S.Akila
Chief Judicial Magistrate -Bro.T.Balamurugan (Tiruvarur)
Principal District Court-Sis. M.Shanthi (Tiruvarur)
ஜெபிப்போம்
குடவாயில் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட குடவாசல் (Kodavasal) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டம் மற்றும் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் இடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். குடவாசல் வட்டத்திற்காக ஜெபிப்போம்.
குடவாசல் பேரூராட்சி, திருவாரூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனைச் சுற்றிய நகரங்கள், நன்னிலம் 15 கிமீ; பாபநாசம் 22 கிமீ; கும்பகோணம் 22 கிமீ; திருவாரூர் 18 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நகரத்தை சுற்றியுள்ள ஊர்களுக்காக ஜெபிப்போம்.
சைவதிருமறை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276ல், காவிரியின் தென்கரையில் உள்ள 128 தலங்களில் 94வது திருத்தலமாக விளங்குவது குடவாசல். கோச் செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றதாகவும் ஓர் வரலாறு உள்ளதாக கூறப்படுகிறது.
குடவாசல் வட்டம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 63 வருவாய் கிராமங்கள் உள்ளன. குடவாசல் ஊராட்சி ஒன்றியம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் குடவாசல் கோணேசுவரர் கோயில் இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும், அவர்களுடைய தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் Bro. M.Selvarasu அவர்களுக்காகவும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் Bro. R.Kamaraj அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
குடவாசல் ஊராட்சி ஒன்றியம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குடவாசல் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. குடவாசல் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குடவாசலில் இயங்குகிறது. குடவாசல் ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களை கொண்டுள்ளது. இவ்வட்டத்தில் மொத்த மக்கள்தொகை 203,157 ஆக உள்ளது. இதில் 101,552 ஆண்களும், 101,605 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 89.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 52,370 குடும்பங்கள் வசிக்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 87.61%, இசுலாமியர்கள் 7.18%, கிறித்தவர்கள் 5.01% மற்றும் பிறர் 0.19%ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
குடவாசல் நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற தொழில்களுக்காக ஜெபிப்போம். இந்த வட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.