No products in the cart.

தினம் ஓர் ஊர் – கீழக்கரை (Kilakarai) – 23/03/25
தினம் ஓர் ஊர் – கீழக்கரை (Kilakarai)
மாவட்டம் – இராமநாதபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 38,355
கல்வியறிவு – 79.4%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – இராமநாதபுரம்
Superintendent of Police – Bro. G.Chandeesh I.P.S.
Additional Collector DRDA – Bro. Veer Pratap Singh IAS.,
Wildlife Warden – Dr. R.Murugan I.F.S.,
District Revenue Officer – Bro. R. Govindarajalu
Principal District Judge – Bro. A.K.Mehbub Alikhan (Ramanathapuram)
ஜெபிப்போம்
கீழக்கரை (Kilakarai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். கீழக்கரை நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. கீழக்கரை வட்டம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் 9 தாலுக்காக்களில் ஒன்றாகும். இத்தாலுக்கா இராமநாதபுரம் வட்டத்தின் கீழக்கரை, உத்தரகோசமங்கை மற்றும் திருப்புல்லாணி குறுவட்டங்களைக் கொண்டு 1 ஏப்ரல் 2018ல் புதிதாக நிறுவப்பட்டது.
கீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்து உள்ளது. இக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன.
கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் (பாறைகள்) சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும்.
அந்த இடைவெளிப் பாதையைக் காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள் (Beacons) அமைக்கபட்டுள்ளன. கீழக்கரைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. கீழக்கரைத் துறைமுகத்தின் முக்கியச் சிறப்பம்சம் இங்கு வந்து நங்கூரமிடும் கப்பல்களெல்லாம் பெருங்காற்றிற்கும், பேரலைகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளாமலிருக்க இங்கு அமைத்துள்ள தீவுகளும் கடலோரத்தில் அமைந்துள்ள பார்களுமே இயற்கையரணாக அமைந்துள்ளன.
இந்த நகரத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,448 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 38,355 ஆகும். அதில் 19,685 ஆண்களும், 18,670பெண்களும் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4391 ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 17.6%, இசுலாமியர்கள் 79.92%, கிறித்தவர்கள் 1.16% மற்றும் பிறர் 1.32% ஆகவுள்ளனர். மக்களின் முக்கிய தொழில்கள் முத்து, சங்கு, கடல் வர்த்தகம் உள்ளிட்டவை அடங்கும்.
கீழக்கரை அதன் சமூக நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்றது. இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள், மற்ற மதங்களைச் சேர்ந்த இந்து, கிறிஸ்தவர்கள் ஒன்றாக வாழ்கின்றனர். இந்த நகரம் ஸ்பானிஷ் மூரிஷ் கட்டிடக்கலையை நினைவூட்டுகிறது. இந்தியாவின் மிகப் பழமையான மசூதியான பாலையா குத்பா பள்ளியைக் கொண்டுள்ளது. இது 1300 ஆண்டுகளுக்கும் மேலான தனித்துவமான இஸ்லாமியத்திற்கு முந்தைய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
கீழக்கரை நகராட்சிக்காக ஜெபிப்போம். கீழக்கரை நகராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். நகரத்தின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். நகராட்சி ஆணையருக்காகவும், நகராட்சி தலைவருக்காகவும், நகராட்சி துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். கீழக்கரை நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.