Daily Updates

தினம் ஓர் ஊர் – காரியாபட்டி – 05/07/23

தினம் ஓர் ஊர் – காரியாபட்டி
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – விருதுநகர்
மக்கள் தொகை – 105,428
கல்வியறிவு – 69%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – திருச்சுழி
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. A.Chandrasekaran (I.P.S)
District Revenue Officer – Bro. J.Ravikumar (Virudhunagar)
மக்களவை உறுப்பினர் – Bro. Kani K.Navas (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thangam Thennarasu (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. K.Mony
நகராட்சி தலைவர் – Bro. R.Madhavan
நகராட்சி துணை தலைவர் – Sis. T.Dhanalakshmi
Additional District and Sessions Judge – Bro. T.V.Hemanandakumar
Judicial Magistrate Judge – Sis. S.P.Kavitha

ஜெபிப்போம்

காரியாபட்டி (Kariapatti), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் அமைந்த முதல்நிலைப் பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி மதுரையிலிருந்து 30 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கல்குறிச்சியிலிருந்து 8 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. காரியாபட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

காரியாபட்டி வட்டம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இப்பேரூராட்சி 9.20 ச.கி.மீ பரப்பளவையும் 15 வார்டுகளையும் கொண்டதாகும். இந்த வட்டத்தின் கீழ் 107 வருவாய் கிராமங்கள் உள்ளன. காரியாபட்டி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் தங்கள் பணியினை உண்மை உத்தமத்தோடு செய்ய ஜெபிப்போம்.

பாளையக்காரரின் ஆட்சியாளர்கள் தூப்பூர், கரிசல்குளம், பாளையம்பட்டி கோட்டங்களை ஜமீன் மண்டலங்களாகப் பிரித்து, காரியாபட்டி ஒவ்வொரு ஜமீனுக்கும் எல்லையாகப் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் இந்த இடத்தை தங்கள் வணிக மையமாக பயன்படுத்தினர். இந்த இடம் கழுதை சந்தைக்கு மிகவும் பிரபலமானது. எனவே, இது கழுதைப்பட்டி (கழுதை – கழுதை, பட்டி – சிறிய நகரம்) என்று அழைக்கப்பட்டது. காத்தியார் என்ற கோவில் அர்ச்சகர் இருந்ததால் இது ‘காத்தியார்பட்டி’ என்றும் அழைக்கப்பட்டது. இந்த இடம் கார சேவு என்ற சிற்றுண்டிக்கு மேலும் பிரபலமானது, ஏனெனில் இந்த இடம் காராப்பட்டி என்றும் அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் காரியாபட்டி ஆனது.

திருச்சுழி சட்டமன்றத் உறுப்பினர் Bro. Thangam Thennarasu அவர்களுக்காகவும், இராமநாதபுரம் மக்களவைத் உறுப்பினர் Bro. Kani K.Navas அவர்களுக்காகவும் ஜெபிப்போம். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் Bro. V.P.Jeyaseelan அவர்களுக்காகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Bro. A.Chandrasekaran அவர்களுக்காகவும், நகராட்சி ஆணையர் Bro. K.Mony அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. R.Madhavan அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Sis. T.Dhanalakshmi அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய்துறை அலுவலர் Bro. J.Ravikumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

காரியாபட்டி பேரூராட்சியில் மொத்தம் 105,428 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 52,993 பேரும், பெண்கள் 52,435 பேரும் உள்ளனர். பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 70.4% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 28,032 குடும்பங்கள் இருக்கிறார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.76% பேரும், இசுலாமியர்கள் 1.63% பேரும், கிறித்தவர்கள் 2.49% மற்றும் பிற மதத்தினர் 0.13% ஆகவுள்ளனர். இந்த பேரூராட்சியில் வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் தேவைகளுக்காகவும், ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

இப்பகுதி பொதுமக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை ஆகும். காரியாபட்டியில் ஆண்களின் கல்வியறிவு 91.10% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 80.62% ஆகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள விவசாயிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களின் தொழிலை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். கூலி வேலை செய்யும் மக்களுடைய வாழ்வாதாரத்திற்காக ஜெபிப்போம். அவர்களின் கையின் பிரயாசத்தை கர்த்தர் இரட்டிப்பாய் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.