Daily Updates

தினம் ஓர் ஊர் – காட்டுப்புத்தூர் (Kattuputhur) – 21/06/24

தினம் ஓர் ஊர் – காட்டுப்புத்தூர் (Kattuputhur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருச்சிராப்பள்ளி

மக்கள் தொகை – 11,115

கல்வியறிவு – 74.83%

மக்களவைத் தொகுதி – பெரம்பலூர்

சட்டமன்றத் தொகுதி – முசிறி

மாவட்ட ஆட்சியர் – Bro. Pradeep Kumar (I.A.S)

Commissioner of Police  – Sis. N. Kamini (IPS)

Superintendent of Police – Bro. V. Varunkumar (IPS)

District Revenue Officer  – Sis. R. Rajalakshmi

Project Director – Bro. S. Devanathan

மக்களவை உறுப்பினர் – Bro. T. R. Paarivendhar (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. N. Thiyagarajan (MLA)

பேரூராட்சி தலைவர் (Thottiyam) – Sis. தமிழ்செல்வி திருஞானம்

Mayor – Bro. M. Anbazhagan

Deputy Mayor – Sis. G. Dhivya

Commissioner – Bro. R. Vaithinathan

Assistant Executive – Bro. V.Jeyakumar

Engineer (Planning)

Principal District Judge – Bro. K.Babu

ஜெபிப்போம்

காட்டுப்புத்தூர் (Kattuputhur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருச்சிராப்பள்ளியிலிருந்து 70 கிமீ தொலைவில் காட்டுப்புத்தூர் உள்ளது.

இப்பேரூராட்சியானது 10.88 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 71 தெருக்களும் கொண்டுள்ளது. வருவாய் கிராமத்தின் அடிப்படையில் காட்டுப்புத்தூர் கிழக்கு, காட்டுப்புத்தூர் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளன.

காட்டுப்புத்தூர் பேரூராட்சி முசிறி சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. முசிறி சட்டமன்ற உறுப்பினர் Bro. N. Thiyagarajan அவர்களுக்காகவும், பெரம்பலூர் மக்களவை உறுப்பினர்Bro. T. R. Paarivendhar அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 11,115 ஆகும். இதில் 5,546 ஆண்கள் மற்றும் 5,569 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் 3076 குடும்பங்கள் வாழ்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 97.12% பேரும், இஸ்லாமியர்கள் 2.22% பேரும், கிறிஸ்தவர்கள் 0.59% பேரும், சீக்கியர் 0.01% பேரும் வசிக்கிறார்கள்.

இங்கு அரசு உதவி பெறும் ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, இரு தொடக்கப்பள்ளிகள், அரசு மருத்துவமனை, இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் உயர் நிலைப் பள்ளி, காவல் நிலையம், தொலைபேசி நிலையம், பேருந்து நிலையம், அஞ்சல் நிலையம், கிளை நூலகம் உள்ளன. ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளி: கி.பி 1903ம் ஆண்டு சிதம்பரம் ரெட்டியார் என்பவர் காட்டுப்புத்தூர் ஜமீந்தார் மேல்நிலைப் பள்ளியை உருவாக்கினார். இப்பள்ளி கி.பி 2003ல் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடியது.

காட்டுப்புத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சந்தைகேட் என்ற இடத்தில் வாரசந்தை கூடுகிறது. இது இப்பகுதியில் வெள்ளிச்சந்தை என்று அழைக்கபடுகிறது. வெள்ளிச்சந்தையன்று சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள் காய்கறி உட்பட்ட விளைப்பொருட்களையும், மற்ற நகரங்களிருந்து வரும் வியாபாரிகள் பலசரக்கு பொருட்களையும் விற்பனை செய்வர். மொத்த வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்வர்.

காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள சீத்தப்பட்டி, கணபதிபாளையம், கருக்கமடை, மூங்கில்ப்பட்டி, ஆலாம்பாளையம்புதூர், சுள்ளிப்பாளையம், பிடாரமங்கலம், முருங்கை போன்ற கிராமங்கள் தங்கள் முதன்மை தேவைகளுக்கு காட்டுப்புத்தூரை சார்ந்தே இருக்கின்றன.

நகரத்தின் முக்கிய தொழில் விவசாயம். நெல், வாழை, கரும்பு மற்றும் வெற்றிலை முக்கியமாக பயிரிடப்படுகின்றன. காட்டுப்புத்தூர் தமிழ்நாட்டின் காவேரி டெல்டாவில் மிகவும் வளமான நிலங்களைக் கொண்டுள்ளது. நெல் மற்றும் வாழை ஆண்டு முழுவதும் மாறி மாறி வளர்க்கப்படுகிறது, காவேரி டெல்டாவிலிருந்து வரும் தண்ணீரை நம்பி, முக்கியமாக காட்டுப்புத்தூரில் இருந்து 3 கிமீ (1.9 மைல்) பாய்கிறது. காவேரி டெல்டாவிலிருந்து வரும் நீர், பிரதான ஆற்றில் இருந்து பிரியும் கால்வாய்கள் மூலம் காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு கிடைக்கிறது.

காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களுடைய இரட்சிப்பிற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தின் முக்கிய தொழிலான விவசாயத்திற்காகவும், விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சிக்கு அருகில் உள்ள ஊர்களுக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள பள்ளிகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய வார்த்தை அறிவிக்கப்பட்டு, அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.