Daily Updates

தினம் ஓர் ஊர் – கடவூர் (Kadavur) – 28/06/24

 

தினம் ஓர் ஊர் – கடவூர் (Kadavur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கரூர்

மக்கள் தொகை – 121,139

கல்வியறிவு – 57.85%

பரப்பளவு – 471.85 சதுர கிலோ மீட்டர்

மக்களவைத் தொகுதி – கரூர்

சட்டமன்றத் தொகுதி – கிருஷ்ணராயபுரம்

District Collector – Bro. M. Thangavel, I.A.S

Superintendent of Police – Bro. Prabhakar

District Revenue Officer – Bro. M. Kannan

Project Director – Sis. Sreelekha Thamilchelvan

மக்களவை உறுப்பினர் – Sis. Jothimani (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Sis. K. Sivagama Sundari (MLA)

Mayor – Sis. Kavitha Ganesan

Corporation Commissioner – Bro. N. Ravichandran

Deputy Mayor – Bro. Dharani Saravanan

District Judge  – Bro. R. Shanmuga Sundaram

Chief Judicial Magistrate (Karur) – Bro. C.Sornakumar

Principal District Munsif Judge (Karur) – Sis. T.P.Sridevi

ஜெபிப்போம்

கடவூர் தாலுக்கா என்பது கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்கா ஆகும். கரூர் மாவட்டத்தின் ஆறு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இது தரகம்பட்டி தாலுகாவின் தலைமையகம் ஆகும். கடவூர் வட்டம் கடவூர் மற்றும் மைலம்பட்டி என இரண்டு உள்வட்டங்களையும் கொண்டுள்ளது.

கடவூர் ஊராட்சி 23 வருவாய் கிராமங்களையும், 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சகோ. செல்வராஜ் அவர்களுக்காகவும், துணைத்தலைவர் சகோ. கைலாசம் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

கடவூர் தாலுக்கா கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இது 1967 முதல் 1971 வரை சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. இந்த ஊராட்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த வட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர் சகோதரி சிவகாம சுந்திரி அவர்களுக்காகவும், மக்களவைத் தொகுதி உறுப்பினர் சகோதரி ஜோதிமணி அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை ஞானத்தோடும், தேவ பயத்தோடு செய்ய ஜெபிப்போம்.

கடவூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 121,139 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கல்வியறிவு பெற்றவர்கள் 54,935 பேரில் 31,642 பேர் ஆண்கள் மற்றும் 23,293 பேர் பெண்கள் இருக்கிறார்கள். படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்ற பிள்ளைகளுக்கு ஏற்ற வேலையை கொடுத்து அவர்களின் கையின் பிரயாசத்தையும் ஆசீர்வதிக்கும்படி பாரத்தோடு ஜெபிப்போம்.

இந்த தாலுக்காவில் 55,189 தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களை செய்துவருகிறார்கள். அவர்கள் செய்கின்ற தொழில்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், தொழில்களில் நஷ்டம் அடையாமல் வளர்ச்சி ஏற்படும்படி ஜெபிப்போம்.

கடவூர் தாலுக்காவில் மொத்தம் 13,533 விவசாயிகள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் 8,273 ஆண்கள் மற்றும் 5,260 பெண்கள் பயிரிடுகின்றனர். கடவூரில் 25,206 பேர் விவசாய நிலத்தில் கூலி வேலை செய்கிறார்கள். நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளையும், விவசாய குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதித்து பாதுகாக்கும்படி ஜெபிப்போம். விளைச்சலுக்கு ஏற்ற பலனை கர்த்தர் அவர்களுக்கு கொடுத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

கடவூர் தாலுக்காவிற்காக ஜெபிப்போம். இந்த வட்டத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தருடைய பாதுகாப்பு கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம். பல்வேறு தொழில்கள் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழிலுக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.