No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஆய்க்குடி (Ayakudi) – 04/03/25
தினம் ஓர் ஊர் – ஆய்க்குடி (Ayakudi)
மாவட்டம் – தென்காசி
வட்டம் – கடையநல்லூர்
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 51,370
கல்வியறிவு – 64%
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – கடையநல்லூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. Dr. G.S.Sameeran, I.A.S
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – Bro. Aravind, T.P.S.,
Municipal Commissioner – Bro. S.Ravichandran (Kadayanallur)
Principal District Judge – Bro. B. Rajavel (Tenkasi)
Additional District Judge – Bro. S. Manojkumar (Tenkasi)
Chief Judicial Magistrate – Bro. C.Kathiravan (Tenkasi)
ஜெபிப்போம்
ஆய்க்குடி (Ayakudi) என்பது தமிழ்நாடு மாநிலத்தில், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட முதல் நிலை பேரூராட்சி ஆகும். திருநெல்வேலியிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்த ஆய்க்குடிக்கு வடக்கில் அனுமான் ஆறும் கிளாங்காடு, கிழக்கில் சுரண்டையும், தெற்கில் தென்காசியும், மேற்கில் செங்கோட்டையும் உள்ளது.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் ஆண்டிரன் ஆய்க்குடியில் வாழ்ந்த, ஆண்ட குறுநில மன்னன் ஆய் ஆண்டிரன் ஆண்ட பகுதி என்பதால் ஆய்க்குடி எனும் பெயர் அமைந்ததாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள் நற்றிணை (167) குறுத்தொகை (84) அக நானூறு (69,152,198) புறநானூறு (127,136,240-41) ஆகிய நூல்களில் ஆய் ஆண்டிரன், ஆய்க்குடி என்னும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. பிற்காலச் சோழர்களின் படையெடுப்பினால், இந்தியாவில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆய்க்குடி கேரளா ஒரு பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆய்க்குடி பேரூராட்சி கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த பேரூராட்சி 8.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களையும் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் உள்ள 15 வார்டு கவுன்சிலர்களுக்காக அவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டுகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
ஆய்க்குடியின் மக்கள் தொகை 51,370 ஆகும். இவர்களில் ஆண்கள் 25,615 பேரும், பெண்கள் 25755 பேரும் இருக்கிறார்கள். ஆய்க்குடியின் சராசரி கல்வியறிவு விகிதம் 64% ஆக உள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
பொதிகை மலையடிவாரத்தில், தென்காசி – சுரண்டை செல்லும் பாதையில் அமைந்த ஆய்க்குடி ஊரைச் சுற்றி தென்னந்தோப்புகளும், வெற்றிலை கொடிக்கால்களும் நிறைந்து காணப்படுகிறது. ஆய்க்குடி பேரூராட்சியின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.
ஆய்க்குடி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தின் சட்ட மன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும், பேரூராட்சி தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். ஆய்க்குடி நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.