Daily Updates

தினம் ஓர் ஊர் – ஆம்பூர் (Ambur) – 12/10/24

தினம் ஓர் ஊர் – ஆம்பூர் (Ambur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருப்பத்தூர்

மக்கள் தொகை – 1,13,856

கல்வியறிவு – 86.83%

District Collector – Bro. K. Tharpagaraj, IAS

Superintendent of Police  – Sis. Shreya Gupta, IPS.

District Revenue Officer  – Bro. Narayanan

Municipality Commissioner – Bro. P. Santhanam

Chairman – Bro. Aajiaz Ahamed

மக்களவைத் தொகுதி – வேலூர்

சட்டமன்றத் தொகுதி – ஆம்பூர்

மக்களவை உறுப்பினர் – Bro. Kathir Anand (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. C. Vilwanathan (MLA)

District and Sessions Judge – Sis. S. Meenakumari (Tirupathur)

Chief Judicial Magistrate  – Bro. J. Omprakash (Tirupathur)

Subordinate Judge – Sis. P. Sudha (Tirupathur)

Principal District Munsif – Sis. R. Vijayalakshmi (Tirupathur)

Subordinate Judge  – Sis. M. Santhi (Ambur)

ஜெபிப்போம்

ஆம்பூர் (Ambur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியும், ஆம்பூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலமடைந்த உணவாக உள்ளது. ஆம்பூர் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

‘ஆம்’ என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.[ ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின் பழங்காலப் பெயர் காட்டாம்பூர் என்பதாகும். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் காடாக இருந்துள்ளது. இது பண்டைக் காலத்தில் தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம் என்று அழைக்கப்பட்டது.

ஆம்பூரில், ஆம்பூர் பிரியாணி மற்றும் மக்கன்பேடா மிகவும் பிரபலம் ஆகும். ஆற்காட்டை ஆண்ட ஆற்காடு நவாப் மூலம் சிறப்படைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்குத் தனிச் சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும் இந்த ஊரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது.

ஆம்பூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 77 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஆம்பூரில் உள்ள ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். ஆம்பூர் Municipality Commissioner  Bro. P. Santhanam அவர்களுக்காகவும், Chairman Bro. Aajiaz Ahamed அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த நகராட்சியானது வேலூர் மக்களவைத் தொகுதிக்கும், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. வேலூர் மக்களவை உறுப்பினர் Bro. Kathir Anand அவர்களுக்காகவும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. A. C. Vilwanathan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

ஆம்பூர் நகரத்தில் 1,13,856 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 56,052 ஆண்கள், 57,804 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 86.83% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 91.18%, பெண்களின் கல்வியறிவு 82.65% ஆகும். இந்த நகரத்தில் 50.1% முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். மேலும் 45.8% இந்துக்கள், 3.8% கிறிஸ்தவர்கள் மற்றும் 0.3% பிற மதங்களைப் பின்பற்றி வாழ்கிறார்கள். ஆம்பூரில் மொத்தம் 25,009 குடும்பங்கள் இருக்கிறார்கள். தக்காணி உருது 48.27% மக்களால் அதிகம் பேசப்படும் மொழியாக உள்ளது.

ஆம்பூரில் பொருளாதாரம் தோல் தொழிலைச் சார்ந்ததுள்ளது. இந்த நகரம் தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது மற்றும் முடிக்கப்பட்ட தோல் மற்றும் தோல் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான முன்னணி கிளஸ்டராக உள்ளது. ஆம்பூரில் கிட்டத்தட்ட 80 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.  இங்கு பல காலணிகள் கடைகள் உள்ளன. இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணிகளை அதிகம் ஈட்டித் தருகின்றன. குறிப்பிடத்தக்க தொழிற்சாலையில் பரிதா, ப்ளோரன்ஸ், டிஏடபிள்யூ ஆகியவையாகும். ஆம்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காக ஜெபிப்போம்.

ஆம்பூர் நகராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். ஆம்பூர் நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். ஆம்பூர் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.