Daily Updates

தினம் ஓர் ஊர் – இராஜசிங்கமங்கலம் (Rajasingamangalam) – 22/03/25

தினம் ஓர் ஊர் – இராஜசிங்கமங்கலம் (Rajasingamangalam)

மாவட்டம் – இராமநாதபுரம்

மாநிலம் – தமிழ்நாடு

பரப்பளவு – 13.25 சதுர கிலோமீட்டர்கள் (5.12 sq mi)

மக்கள் தொகை – 14,565

கல்வியறிவு – 79.4%

மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்

சட்டமன்றத் தொகுதி – திருவாடானை

Superintendent of Police  – Bro. G.Chandeesh I.P.S.

Additional Collector DRDA – Bro. Veer Pratap Singh IAS.,

Wildlife Warden – Dr. R.Murugan I.F.S.,

District Revenue Officer – Bro. R. Govindarajalu

Principal District Judge – Bro. A.K.Mehbub Alikhan (Ramanathapuram)

ஜெபிப்போம்

இராஜசிங்கமங்கலம் வட்டம், அல்லது ஆர். எஸ். மங்கலம் வட்டம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தில் இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என கூறப்படும் சிறப்பும் ஆர். எஸ். மங்கலம் தாலுகாவிற்கு உண்டு.

திருவாடானை வட்டம் மற்றும் பரமக்குடி வட்டங்களை சீரமைத்து, இராஜசிங்கமங்கலத்தைத் நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, இராஜசிங்கமங்கலம் வருவாய் வட்டம் 16 ஆகஸ்டு 2018 அன்று உருவானது. இராஜசிங்கமங்கலம் வட்டம் ஆனந்தூர், சோழந்தூர், மற்றும் இராஜசிங்கமங்கலம் என மூன்று உள்வட்டங்களும், 39 வருவாய் கிராமங்களும் கொண்டது. ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சியானது திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

இங்கு தமிழகத்திலேயே இரண்டாவதும் இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலும் ஆன மிகப் பெரிய கண்மாயான இராஜசிங்கமங்கலம் கண்மாய் உள்ளது. நாரை தாவாத நாற்பதெட்டு மடை உள்ள கண்மாய் எனும் சிறப்பு இதற்கு உண்டு. இக்கண்மாய் 1100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மூன்றாம் ராஜ சிம்ம பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்டது.

மங்கலம் என்ற சொல் நற்பயன், அதிர்ஷ்டம் என்னும் பொருள்களில் வழங்கி மக்களின் குடியிருப்புகளையும் குறிக்கத் தொடங்கியது. இடைக்காலத்தில் பிராமணர்களின் குடியிருப்புகள் மங்கலம் எனக் குறிக்கப்பட்டன. அக்கால அரசர்கள் பிராமணர்களுக்கு நிலங்களைக் கொடையாகத் தரும் போது தம் பெயர் விளங்க தம் பெயருடன் ‘மங்கலம்’ என இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்துள்ளனர். அந்த வகையில் கி.பி. 900 முதல் கி.பி. 920 வரை பாண்டிய நாட்டை ஆண்ட மூன்றாம் ராஜசிம்மன், ராஜசிம்மமங்கலம் என தனது பெயரில் ஊரையும் அமைத்து பிராமணர்களுக்கு கொடையாக வழங்கியதை செப்பேடுகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது அந்த பெயர் மருவி இராஜசிங்கமங்கலம் என பெயர் உருவானது. அதன் சுருக்கமே ஆர்.எஸ்.மங்கலம்.

இங்கு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெறுகின்றன. அருகில் உள்ள கிராமங்கள் முழுவதற்கும் இதுதான் பெரிய ஊர். இங்கு மருத்துவ வசதி, கல்வி வசதி, போக்குவரத்து வசதி ஆகிய அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் உள்ளன. இப்பேரூராட்சி 3,481 வீடுகளும், 14,565 மக்கள்தொகையும் கொண்டது. இது 13.25 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்டுள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 43.45%, கிறிஸ்தவர் 48.14%, சீக்கியர் 8.14% மற்றும் 0.01% ஜெயின் உள்ளனர்.

இராஜசிங்கமங்கலம் நகராட்சிக்காக ஜெபிப்போம். இராஜசிங்கமங்கலம் நகராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். நகரத்தின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். நகராட்சி ஆணையருக்காகவும், நகராட்சி தலைவருக்காகவும், நகராட்சி துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இராஜசிங்கமங்கலம் நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.