No products in the cart.

தினம் ஓர் ஊர் – மேலகரம் (Melagaram) – 11/03/25
தினம் ஓர் ஊர் – மேலகரம் (Melagaram)
மாவட்டம் – தென்காசி
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 14,644
கல்வியறிவு – 78%
மாவட்ட ஆட்சியர் – Bro. Dr. G.S.Sameeran, I.A.S
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – Bro. Aravind, T.P.S.,
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – தென்காசி
Principal District Judge – Bro. B. Rajavel (Tenkasi)
Additional District Judge – Bro. S. Manojkumar (Tenkasi)
Chief Judicial Magistrate – Bro. C.Kathiravan (Tenkasi)
ஜெபிப்போம்
மேலகரம் (Melagaram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலகரம் பேரூராட்சி தென்காசியிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் தென்காசிக்கும் குற்றாலத்துக்கும் இடையே மேலகரம் அமைந்துள்ளது.
இப்பேரூராட்சியின் 8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த பேரூராட்சி தென்காசியிலிருந்து 3 கிமீ தொலவிலும், குற்றாலத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கிமீ தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.
இப்பேரூராட்சியானது 6.56 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சியில் மொத்தம் 14,644 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 49% மற்றும் பெண்கள் 51% ஆக உள்ளனர். மேலகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 78% ஆகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 5884 குடும்பங்கள் வாழ்கிறார்கள்.
தமிழ்நாட்டின் முதல் வட்டார கிராமப்புற வங்கியான பாண்டியன் கிராம வங்கி அதன் கிளைகளில் ஒன்று மேலகரத்தில் உள்ளது. மேலகரம் பேரூராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், சுகாதார நிலையங்களுக்காகவும், மருத்துவமனை ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
மேலகரம் பேரூராட்சிக்காகவும் அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். மேலகரம் பேரூராட்சியின் சட்ட மன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும், பேரூராட்சி தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். மேலகரம் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.