Daily Updates

தினம் ஓர் ஊர் – செட்டிபாளையம் (Chettipalayam) – 22/11/24

தினம் ஓர் ஊர் – செட்டிபாளையம் (Chettipalayam)

மாவட்டம் – கோயம்புத்தூர்

மாநிலம் – தமிழ்நாடு

வட்டம் – மதுக்கரை

பரப்பளவு  – 31.86 சதுர கிலோமீட்டர்கள் (12.30 sq mi)

மக்கள் தொகை – 30,357

கல்வியறிவு – 84.39 %

District Collector  –  Bro. Kranthi Kumar Pati I.A.S.

District Revenue Officer – Sis. M. Sharmila

Commissioner of Police  – Bro. V. Balakrishnan I.P.S. (Coimbatore)

Commissioner Corporation of Coimbatore  – Bro. Sivaguru Prabakaran I.A.S.

Revenue Divisional Officer – Bro. P.K. Govindan Coimbatore (North)

Revenue Divisional Officer  – Bro. Pandarinathan Coimbatore (South)

மக்களவைத் தொகுதி – பொள்ளாச்சி

சட்டமன்றத் தொகுதி – கிணத்துக்கடவு

மக்களவை உறுப்பினர் – Bro. Eswaraswami (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. Damodaran (MLA)

Municipal Commissioner  – Bro. P. Pitchaimani (Madukkarai)

Chairman – Sis. Noorjahan (Madukkarai)

Vice – Chairman – Bro. Rameshkumar (Madukkarai)

Principal District Judge  – Sis. G. Vijaya (Coimbatore)

District Munsif-Cum-Judicial Magistrate  – Sis. T. Uma Maheswari (Madukkarai)

ஜெபிப்போம்

செட்டிபாளையம் (Chettipalayam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். செட்டிபாளையம் பேருராட்சி கோயம்புத்தூருக்கு தெற்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இரண்டாம் நிலை பேருராட்சியாகும். பல்லடம் – கொச்சி இணைப்பு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேருராட்சியில் லார்சன் அன் டியூப்ரோ நிறுவனம் உள்ளது.

இப்பேரூராட்சியானது 31.86 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியின் Municipal Commissioner  Bro. P. Pitchaimani அவர்களுக்காகவும், Chairman Sis. Noorjahan அவர்களுக்காகவும், Vice – Chairman Bro. Rameshkumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

செட்டிபாளையம் பேரூராட்சி கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் Bro. S. Damodaran அவர்களுக்காகவும், பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் Bro. Eswaraswami அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

செட்டிபாளையம் டவுன் பஞ்சாயத்தில் 10,366 மக்கள் தொகை உள்ளது, இதில் 5,268 ஆண்கள் மற்றும் 5,098 பெண்கள். இப்பேரூராட்சி 2,841 குடும்பங்கள் வசிக்கிறார்கள்.  மொத்த மக்கள்தொகையில் இந்து 96.75%, முஸ்லிம் 0.76% மற்றும் கிறிஸ்தவர்கள் 2.43% உள்ளனர். செட்டிபாளையத்தில், ஆண்களின் கல்வியறிவு 83.35% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 70.52% ஆகவும் உள்ளது.

இப்பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள்தொகையில், 4,450 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,299 ஆண்கள் மற்றும் 1,151 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

செட்டிபாளையம் பேரூராட்சிக்காகவும், பேரூராட்சியின் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். செட்டிபாளையம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.