No products in the cart.
தினம் ஓர் ஊர் – காரிமங்கலம் (Karimangalam) – 26/10/24
தினம் ஓர் ஊர் – காரிமங்கலம் (Karimangalam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தருமபுரி
பரப்பளவு – 3.5 சதுர கிலோமீட்டர்கள் (1.4 sq mi)
மக்கள் தொகை – 13,511
கல்வியறிவு – 75.52%
மக்களவைத் தொகுதி – தருமபுரி
சட்டமன்றத் தொகுதி – பாலக்கோடு
District Collector – Sis. K.Santhi I.A.S
Superintendent of Police – Bro. S.S. Maheswaran
Municipal Commissioner – Bro. S. Bhuvaneshwaran (a) Annamalai
Municipal Chairman – Sis. M.Lakshmi
Municipal Vice Chairman – Sis. A. Nithya
மக்களவை உறுப்பினர் – Bro. A. Mani (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K. P. Anbalagan (MLA)
Principal District Judge – Bro. D.V.Aanand (Dharmapuri)
Chief Judicial Magistrate – Bro. B.Santhosh (Dharmapuri)
District Munsif Cum Judicial Magistrate – Sis. P.Ezhilarasi (Karimangalam)
ஜெபிப்போம்
காரிமங்கலம் (Karimangalam) என்பது தமிழ்நாட்டின் கொங்குநாடு பகுதியில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் தாலுகாவின் தலைமையகமாகும். இது தருமபுரியிலிருந்து 20 கிமீ தொலைவிலும், சேலத்திலிருந்து 70 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
காரிமங்கலம் வட்டம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டம், தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு மற்றும் அரூர் வட்டங்களைச் சீரமைத்து பிரித்து, காரிமங்கலம் பேரூராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் நாள் உருவாக்கப்பட்டது.
இந்த வட்டத்தின் கீழ் 52 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டம் காரிமங்கலம், கம்பைநல்லூர், பெரியனஹள்ளி, வெளிச்சந்தை என 4 உள்வட்டங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
காரிமங்கலம் வட்டம் மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். காரிமங்கலம் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. இந்த நகரத்திற்கு தெற்கில் தருமபுரி 22 கிமீ; வடக்கில் கிருஷ்ணகிரி 24 கிமீ; கிழக்கில் அரூர் 65 கிமீ; மேற்கில்பாலக்கோடு 18 கிமீ மாரண்டஹள்ளி 24 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்த நகரமானது 3.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 69 தெருக்களையும் கொண்டுள்ளது. கொண்ட இந்நகரம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பாலக்கோடு நகரத்தின் சட்டமன்ற உறுப்பினர் Bro. K. P. Anbalagan அவர்களுக்காகவும், தருமபுரி மக்களவை உறுப்பினர் Bro. A. Mani அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
காரிமங்கலத்தில் 13,511 மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகையில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50%. காரிமங்கலத்தின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு: ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 49%. காரிமங்கலம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த நகரத்தில் மொத்தம் 3,398 குடும்பங்கள் வசிக்கிறார்கள்.
இந்த நகரத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையில், 6,052 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,851 ஆண்கள் மற்றும் 2,201 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கிற எல்லா வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.
காரிமங்கலம் நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் ஆண்டவரை அறியாத மக்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும் அதன்மூலம் அநேக ஆத்துமாக்கள் கர்த்தரை ஏற்றுக்கொள்ளும்படி ஜெபிப்போம். காரிமங்கலம் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.