Daily Updates

தினம் ஓர் ஊர் – வாணியம்பாடி (Vaniambadi) – 10/10/24

தினம் ஓர் ஊர் – வாணியம்பாடி (Vaniambadi)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருப்பத்தூர்

மக்கள் தொகை – 117,019

கல்வியறிவு – 85.1%

District Collector – Bro. K. Tharpagaraj, IAS

Superintendent of Police  – Sis. Shreya Gupta, IPS.

District Revenue Officer  – Bro. Narayanan

Municipality Commissioner – Bro. Sathishkumar

Chairman – Sis. Uma Bai

மக்களவைத் தொகுதி – வேலூர்

சட்டமன்றத் தொகுதி – வாணியம்பாடி

மக்களவை உறுப்பினர் – Bro. Kathir Anand (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. G. Sendhil Kumar (MLA)

District and Sessions Judge – Sis. S. Meenakumari (Tirupathur)

Chief Judicial Magistrate  – Bro. J. Omprakash (Tirupathur)

Subordinate Judge – Sis. P. Sudha (Tirupathur)

Principal District Munsif – Sis. R. Vijayalakshmi (Tirupathur)

ஜெபிப்போம்

வாணியம்பாடி (Vaniambadi) தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, வாணியம்பாடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது வேலூர்க்கு தென்கிழக்கே 69 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிலும் திருப்பத்தூரில் இருந்து 22 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. வாணியம்பாடி நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

வாணியம்பாடி நகராட்சி பாலாற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். பிரியாணி இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ஆண்கள் இஸ்லாமிய கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும் பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான ஏலகிரி மலை வாணியம்பாடிக்கு அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி  அமைந்துள்ளது.

வாணியம்பாடியின் பழைய பெயர் வணிகன்பாடி (வணிகம்+பாடி) ஆகும். வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களை ஒரு இடத்தில் வைத்து, பாதுகாப்புக்காக வீரர்கள் அடங்கிய ‘பாடி’யை வைத்து பல ஊர்களுக்கு சென்று வணிகம் செய்தனர் அதனால் வணிகன்பாடி என்று பெயர்பெற்ற இந்த ஊர் காலப்போக்கில் திரிந்து வாணியம்பாடி என்று வழங்கப்ட்டது என்று சொல்லப்படுகிறது.

பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் காலத்தில் இவ்வூர் நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கபட்டது. குலோத்துங்க சோழன் காலத்தில் சம்புகளூர் நாட்டு மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துப் பெரும்பாணப்பாடி ஆன வணிகன்பாடி என்று இந்த ஊர் குறிக்கபட்டுள்ளது. வணிகன் பாடியை பல்லவர்களின் கீழும், சோழர்கள் கீழும் குறிநில மன்னர்களான பாணர் ஆண்டதை கல்வெட்டுகள் வழியாக அறியமுடிகிறது.

வாணியம்பாடி நகராட்சி ஏப்ரல் 1886 இல் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது. பின்னர் 1996 ஆம் ஆண்டு இந்த நகராட்சியானது 01.05.1996 தேதியிட்ட ஊரக வளர்ச்சி உள்ளூர் நிர்வாகத் துறையால் தரம் II நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.  பிறகு 1998ல், இந்த நகராட்சி 1ம் வகுப்பாக தரம் உயர்த்தப்பட்டது.

வாணியம்பாடி வட்டம் , தமிழ்நாட்டில் 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும். இந்த நகரம் 36 வார்டு உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டுவருகிறது. வாணியம்பாடி நகராட்சி Commissioner Bro. Sathishkumar அவர்களுக்காகவும், Chairman Sis. Uma Bai அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இந்த நகராட்சியானது வேலூர் மக்களவைத் தொகுதிக்கும், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. வேலூர் மக்களவை உறுப்பினர் Bro. Kathir Anand அவர்களுக்காகவும், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் Bro. G. Sendhil Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 117,019 ஆகும். இதில் ஆண் மக்கள் தொகை 57,839 ஆகவும், பெண் மக்கள் தொகை 59,180 ஆகவும் உள்ளது. இந்த நகரத்தில் 20,559 குடும்பங்கள் வாழ்கிறார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 41.75%, இசுலாமியர்கள் 55.74%, கிறித்தவர்கள் 1.99%, தமிழ்ச் சமணர்கள் 0.02%, மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர். டெக்கானி உருது நகரத்தின் முக்கிய மொழியக பேசப்படுகிறது. இந்த நகரத்தில் பெரும்பான்மை மதமாக இஸ்லாம் உள்ளது. அதே சமயம் இந்து மதம் இரண்டாவது இடத்திலும், கிறிஸ்தவர்கள் மூன்றாவதாக உள்ளார்கள்.

வாணியம்பாடி தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். தோல் தொழில் துறையில் வாணியம்பாடி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நகரத்தின் முக்கிய வணிகம் தோல் பதனிடுதல் மற்றும் ஆடைகள், கையுறைகள் மற்றும் காலணிகள் போன்ற தோல் பொருட்களை உற்பத்தி செய்வதாகும். இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் 2 கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.

தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியுடன் கூடிய காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஜவ்வாதுமலையின் சந்தன மரங்கள் வாணியம்பாடி தொகுதியில் பெயர் பெற்றது. வாணியம்பாடி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக தென்னை, கரும்பு உள்ளிட்ட வேளாண்மை, கோரை பாய் தயாரிப்பு, பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் ஆகும்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.