Daily Updates

தினம் ஓர் ஊர் – திருமுருகன்பூண்டி (Thirumuruganpoondi) – 26/09/24

தினம் ஓர் ஊர் – திருமுருகன்பூண்டி (Thirumuruganpoondi)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருப்பூர்

பரப்பளவு – 14.5 சதுர கிலோமீட்டர்கள் (5.6 sq mi)

மக்கள் தொகை – 31,528

கல்வியறிவு – 83.90%

District Collector  – Bro. T Christuraj , I.A.S

District Revenue Officer  – Bro. K Karthikeyan

Commissioner of Police  – Sis. Lakshmi IPS

Superintendent of Police  – Bro. Abhishek Gupta IPS

Municipality Commissioner – Bro P.Andavan

Municipality Chairman – Bro. அப்துல் ஹாரிஸ்

மக்களவைத் தொகுதி – நீலகிரி

சட்டமன்றத் தொகுதி – அவிநாசி

மக்களவை உறுப்பினர் – Bro. A. Raja (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. P. Dhanapal (MLA)

Principal District and Sessions Judge – Bro. N.Gunasekaran (Tiruppur)

ஜெபிப்போம்

திருமுருகன்பூண்டி (Thirumuruganpoondi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். திருப்பூர் மாநகராட்சிக்கு மிக அருகாமையில் உள்ள வளர்ந்து வரும் நகராட்சி ஆகும். இந்நகராட்சியில் சிற்பக்கலை கூடங்கள் மூலம் பல்வேறு சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

16 அக்டோபர் 2021 அன்று திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார். இந்த நகராட்சி 22 நகராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Municipal Commissioner Bro. P.Andavan அவர்களுக்காக ஜெபிப்போம்.

திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு தெற்கில் திருப்பூர் 12 கிமீ; வடக்கில் அவிநாசி 5 கிமீ; கிழக்கில் பெருந்துறை 45 கிமீ; கோயம்புத்தூர் 52 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நகரமானது 14.5 சகிமீ பரப்பும், 132 தெருக்களையும் கொண்டுள்ளது.

இந்நகராட்சி அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் P. Dhanapal அவர்களுக்காகவும், நீலகிரி மக்களவை உறுப்பினர் Bro. A. Raja அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

திருமுருகன்பூண்டி நகரம் 31,528 மக்கள்தொகை உள்ளது, இதில் 15,949 ஆண்கள் மற்றும் 15,579 பெண்கள் உள்ளனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 3698 ஆகும். திருமுருகன்பூண்டியில் ஆண்களின் கல்வியறிவு 89.57% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 78.10% ஆகவும் உள்ளது. இந்த நகராட்சியில் மொத்தம் 8,789 வீடுகளுக்கு குடிநீர், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன.

திருமுருகன்பூண்டியில் மொத்த 14090 உழைக்கும் மக்களில், 96.85 % பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 10,225 ஆண்கள் மற்றும் 3,865 பெண்கள். பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற எல்லா வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

திருமுருகன்பூண்டி நகரத்திற்காக ஜெபிப்போம். இப்பகுதியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். திருமுருகன்பூண்டி நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.